பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; அக்டோபர் 18ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -


முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைகள் மாறும். பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த தகராறுகள் தீரும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகி வருமானம் பெருகும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானத்திற்கு குறை இருக்காது. முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து, மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். முக்கியமான வேலைகளை மட்டும் செய்யுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவு தருவதாக இருக்கும்.

வெள்ளி-
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விவாதங்களை செய்ய வேண்டாம்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

ஞாயிறு-
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************


உத்திரட்டாதி -


பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குழப்பமான மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக எடுத்த முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வழக்கமாக செய்யும் வேலையை விட அதிகமாக வேலைகளைச் செய்ய வேண்டியது வரும்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலில் தேங்கி நின்ற நிலைமாறி படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவி கிடைத்தால் புதிய வாய்ப்புகள் தொடர்பான விஷயங்கள் தாமதமானாலும் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். கூடப் பிறந்த சகோதர சகோதரிகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன் -
வரவும் செலவும் சமமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
அலுவலக வேலையில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி -
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
************

ரேவதி -

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள். இனி தடைகள் என்பதே இல்லை. இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி விரைவாக முடியும். வருமானம் பல மடங்காகப் பெருகும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள், நிலுவைத் தொகை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். அயல்நாடுகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாக முதலீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
மனநிறைவும் மன திருப்தியும் ஏற்படக் கூடிய நாள். வருமானம் சரளமாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். நீண்டநாள் நண்பரின் உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சி மன நிறைவைத் தரும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தானாக தேடி வரும் அரசு சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.

வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக அல்லது வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி -
முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழில் வாய்ப்பு கைகூடும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகன பழுது,வீட்டுப் பராமரிப்பு செலவு போன்றவை ஏற்படும். அக்கம்பக்கத்தினருடனும், நண்பர்களுடனும் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யுங்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நன்மைகள் பெருகும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்