திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; அக்டோபர் 10ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


திருவோணம் -

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் வாரம். வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

எந்த முயற்சியிலும் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான வழி வகைகள் கிடைக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகள் இப்போது விற்பனையாகும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

தொழில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி் உறுதி் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக முடிவெடுங்கள், அலுவலக பணியில் கவனமாக இருங்கள். சண்டை சச்சரவுகள் வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். திருமணம் தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும்.

புதன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வியாழன் -
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இல்லத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிதாக வாங்கும் வாய்ப்பும் உள்ளது.

வெள்ளி -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக எச்சரிக்கையும் கூடுதல் கவனமும் தேவை. வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

சனி -
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும்.
*************

அவிட்டம் -

மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும். மனதில் திட்டமிட்ட காரியங்களை செயல் வழியாக செய்து காட்டி சாதனை புரிய கூடிய வாரமாகவும் இருக்கும்.

எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடியே கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். வீடு மாற்றம் செய்ய வேண்டியது வரும் அல்லது வாகன மாற்றம் செய்ய வேண்டிய சிந்தனை ஏற்படும். அலுவலகப் பணிகளில் இடம் மாற்றம் அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்கள் இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். எந்த முயற்சிகளிலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுத்திகளை கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

செவ்வாய் -
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதன் -
சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான ஒரு சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

வியாழன் -
மனநிறைவு தரும்படியான காரியங்களை செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலக வேலைகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நிதானமான வளர்ச்சியும், லாபமும் இருக்கும்.

வெள்ளி -
வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

சனி -
பொறுமை, நிதானம், அவசரப்படாமல் இருப்பது போன்றவை அவசியம். எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து அல்லது ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வாருங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************

சதயம் -

மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். குழப்பமான மனநிலைகளில் இருந்து இப்போது வெளி வருவீர்கள்.
குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாகும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். வாய்ப்பும் பலமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் உறவினர்களும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள். அலுவலகப் பணிகளில் நிறைவான போக்கு உண்டாகும்.

சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். தொல்லை தந்த நபர்கள் விலகிச் செல்வார்கள். தொழில் தொடர்பாக நல்ல தகவல்களும் முன்னேற்றமும் உண்டாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.சுயதொழில் தொடங்குவதற்கான தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பர் இன்று தொடர்பு கொள்வார். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். தொழில்முறை நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அதிகரிக்கும். பயணங்களை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி -
ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். அலுவலகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகளும் தொழில் வளர்ச்சியும், உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகளும் இன்று முழுமையாக விலகும்.

சனி -
அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உறவினர்களுக்கும், மிக முக்கியமான வேண்டியவர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார விஷயமாக பயணம் ஒன்று ஏற்படும்.

ஞாயிறு -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்