- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
உங்களின் செயல்பாடுகளால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாரம்.
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இனி எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் எந்தவிதமான தடைகளும் தாமதங்களும் இருக்காது,
» அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள்- (அக்டோபர் 4 முதல் 10 வரை)
» மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்க முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீங்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை வராமலிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். எதிர்பார்த்த அரசு வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
முழுமையான வெற்றியைத் தரக்கூடிய நாள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் நிச்சய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
.
செவ்வாய் -
எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். நீண்டநாளாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தொழில் முயற்சிகள் மீண்டும் செயலுக்கு வரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாழன்-
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்த்து விடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.
சனி-
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பராமரிப்பு செலவுகள் அதிகமாக ஏற்படும். பழுதடைந்த மனிதர்களில் மீண்டும் புதுப்பிக்கும் வேலையைச் செய்வீர்கள்.
ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீசக்தி பார்வதி அன்னையை செவ்வரளி மலர் கொண்டு வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
****************
மிருகசீரிடம் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
இதுவரை இருந்துவந்த தடை தாமதங்கள் விலகும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் விலகும். இனி மருத்துவச் செலவு என்பதே இருக்காது. தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சமாதானம் உண்டாகும்.
பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
மனநிறைவு ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும் நாள். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.
செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை செய்ய வேண்டியது வரும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படும்.
புதன் -
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடிக்கக்கூடிய நாள். வியாபார பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வெள்ளி -
மன உற்சாகத்தை தரும் நாள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
சனி-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்கும் சிந்தனை ஏற்படும்.
ஞாயிறு -
நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம் -
துர்கை வழிபாடு நன்மைகளைத் தரும். ஸ்ரீதுர்கை கவசம் பாராயணம் செய்வது மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கும்.
*****************
திருவாதிரை -
எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் நடைபெறக்கூடிய வாரம். தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும்.
வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். தாயாரின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள்.
கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் முன்னேற்றமான தகவல்களாகவே கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்துகள் விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
செவ்வாய்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது.
புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.
வியாழன் -
வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்க பெறுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் ஏற்படும்..புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.
சனி-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்துகள் சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
ஞாயிறு -
இதுவரை வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago