- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ), செவ்வாய், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, குரு (வ) என கிரகநிலை உள்ளது.
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள், அக்டோபர் 3ம் தேதி வரை
» திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள், அக்டோபர் 3ம் தேதி வரை
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
எதையும் சாதிக்கும் ஆற்றலுடைய மேஷ ராசியினரே!
இந்த வாரம் உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். வாகனங்கள் வாங்குவதில் தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் நடக்கும்.
திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடைகள் நீங்கி கைக்கு வந்து சேரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துகள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும்.
பெண்களுக்கு குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். மாணவர்கள் விரும்பிய பாடத்தில் ஆர்வம் காட்டினால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
**************************************************************************************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி, குரு (வ) என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களைப் பெற்ற ரிஷப ராசியினரே!
இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம். திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.
பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்ரம் படிப்பது பணச்சிக்கலை நீக்கும். வாழ்வு வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
*************************
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
சுகஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
எதிரில் இருப்பவர்களை தன்வசப்படுத்தும் மிதுன ராசியினரே!
இந்த வாரம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணத்தேவை அதிகரிக்கும். தொழில் வியாபார போட்டிகள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள். பெண்கள் சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும்போதும், விளையாட்டின்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்: பெருமாளை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது காரியத் தடை நீங்கும். பணவரத்து பெருகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
*************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago