- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம் -
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். பலவித நன்மைகள் நடக்கும்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மனதை வருத்திக் கொண்டிருக்கும். இனி பிரச்சினைகளே இல்லாத நிலை ஏற்படும்.
» அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 15ம் தேதி வரை
» மகம், பூரம், உத்திரம்;வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 9 முதல் 15ம் தேதி வரை)
மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் இப்போது முழுமையாக விலகும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளும் அழுத்தங்களும் ஏற்படும். கடன் பிரச்சினைகளும் சற்று அழுத்தத்தைத் தருவதாக இருக்கும். இருந்தாலும் தேவையான உதவிகளும் பொருளாதார உதவிகளும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியப் பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
செலவுகள் அதிகமாக ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். தொலைபேசி வழியாக நல்ல தகவல் கிடைக்கும். தூரத்து உறவினர் ஒரு சில உதவிகளை செய்து கொடுக்க முன் வருவார்.
புதன் -
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகமாகும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம். உங்கள் பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். சிறுதூர பயணமாக இருந்தாலும் தவிர்த்துவிடுவது நல்லது. செலவுகளும், மனக்குழப்பங்களும் இருக்கக்கூடிய நாள்.
வியாழன் -
தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் இருந்த பணிச்சுமை குறையும். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்ததை விட இருமடங்காக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.
வெள்ளி.-
கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் பணம் தொடர்பான விஷயங்களில் வாக்குறுதி தராதீர்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பணத்தைக் கையாளும்போது அதிக கவனம் வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவேண்டும்.
சனி -
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக வங்கிக் கடன் பற்றி இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
ஞாயிறு -
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு செய்யுங்கள். சக்கரத்தாழ்வார் வழிபாடு கூடுதல் நன்மையை தரும்.
*************
அனுஷம் -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் தீரும், தடைகள் அகலும். தடைகள் தாமதங்கள் இனி இருக்காது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிகள் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். சொத்துப் பிரச்சினை சுமுகமாக தீரும்.
குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாடு அல்லது ஆலய தரிசனம் போன்றவை ஏற்படும். அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வழக்கமாகச் செய்யும் வேலையை விட அதிகமாக வேலைகளைச் செய்ய வேண்டியது வரும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவீர்கள். அரசு வழியில் உதவிகள், ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே இருக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.
செவ்வாய்-
திட்டமிட்ட காரியங்கள் மட்டுமல்லாமல் திட்டமிடாத காரியங்களிலும் மிகப் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பாராத வகையில் இருக்கும். தொழில் தொடர்பாக கிடைக்கின்ற உதவிகள் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். பெரும் நன்மைகள் நடைபெறக்கூடிய நாள்.
புதன்-
செலவுகளும் செலவுகளுக்கேற்ற வருமானமும் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வியாழன் -
அலுவல வேலையில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும். எதிர்பார்த்த உதவி தள்ளிபோகும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகளில் ஒரு சில சலுகைகள் கிடைக்கும்.
வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
சனி -
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.
ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை படியுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************
கேட்டை -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் வரும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் சமாதானம் ஆகும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள்.
வியாபார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்பு ஒரு சிலருக்குக் கிடைக்கும். உடனடி லாபம் தரக்கூடிய வியாபாரம் ஒன்று இந்த வாரம் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
இந்த வாரம் -
திங்கள் -
பணிச்சுமை அதிகரிக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகளை இன்று முழு மூச்சாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.
புதன் -
எதிர்காலம் பற்றிய கவலை தோன்றும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகள் கடைசி நேரத்தில் தீரும்.
வியாழன் -
நல்ல விஷயங்கள் அதிகமாக ஏற்படும் நாள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் நம்பிக்கை தரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
சனி -
குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
ஞாயிறு -
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள். சிக்கனமாக இருக்கவேண்டும். நண்பர்களுடன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிக அளவில் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago