ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 2 முதல் 8 வரை)

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -

நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.

சஞ்சலம் தந்த பிரச்சினைகள் முழுமையாக தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். நீண்ட நாளாக திட்டமிட்ட விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது ஒவ்வொன்றாக நிறைவேறும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். அது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியை தரக் கூடிய நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் இன்று தீரும்.

புதன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது, வீட்டு பராமரிப்புச் செலவுகள் என அதிகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும்.

வியாழன் -
பண வரவால் மன நிறைவு உண்டாகும் நாள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய நிகழ்வுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

வெள்ளி -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சகோதரர்கள் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு தருவார்கள். பாகப்பிரிவினைகள் தொடர்பான விஷயங்கள் சுமுகமாக பேசி முடிக்கப்படும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு நண்பர்களால் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் தொடர்பான முயற்சிகளில் சாதகமான தகவல்களை பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.ஆனைமுகனுக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
************

மிருகசீரிடம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சம் முழுமையாக விலகும்.

சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை எளிதாகப் பேசி தீர்ப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாக அறிமுகமாவார்கள்.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்களுக்கு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

சுய தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். தேவையான உதவிகளும் முதலீடுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இயல்பான முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தேவையான உதவிகளும் முதலீடுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலர் தாமாகவே முன்வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்து கொடுப்பீர்கள். அவர்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.

புதன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். நிதானப் போக்கை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

வியாழன் -
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்யவேண்டியது வரும். செய்த வேலையை மீண்டும் செய்யும்படியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடன் கொடுப்பது கூடாது.

சனி -
இதுவரை முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

ஞாயிறு -
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாலஷ்மி தாயாரை வணங்குங்கள். மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****

திருவாதிரை -

நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். நீண்ட நாளாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகள், வழக்குகள் அனைத்தும் இப்போது சுமுகமாகப் பேசித் தீர்க்கும் வாய்ப்பு உள்ளது.

சகோதரர்களுடன் அனுசரித்துச் சென்றால் சொத்து தொடர்பான பிரச்சினைகளை எளிதாக முடிக்கலாம். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் வளர்ச்சி படிப்படியாக முன்னேற்றம் தருவதாக இருக்கும்.

இதுவரை ஏற்பட்டிருந்த கடுமையான நெருக்கடிகள் இப்போது காணாமல் போகும். பெண்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் மனக் குழப்பங்கள் தீரும். சகோதர வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தம் ஒன்று நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மனநிம்மதியை தரும். புதிய வேலை வாய்ப்புக்கான சூழ்நிலை உருவாகும்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நாள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை கடைப் பிடித்தால், இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும்.

புதன் -
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் அளவான முதலீடுகளைச் செய்ய வேண்டும். கமிஷன் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்பட கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களோடு இணைந்து புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்