- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
திருவோணம் -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சாதகமாகவும், லாபகரமாகவும் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
» மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி வரை
» விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி வரை
திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணமான தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கல்விக்கு தகுந்த வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது தகுதியான வேலை கிடைக்கும். அலுவலக நெருக்கடிகள் தீரும்.
பணி தொடர்பாக கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான லாபம் கிடைக்கும். சீரான வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுய தொழில் தொடர்பான முயற்சிகளுக்கு தக்க உதவிகள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். சுய தொழில் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு, இதுவரை முடங்கிக் கிடந்த தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைத்து மீண்டும் தொழில் வளர்ச்சி கிடைக்கப் பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
திருப்திகரமான வருமானம் கிடைக்கக்கூடிய நாள். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளுக்கு உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தி ஆகும். வாகன மாற்றம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புதன்-
சராசரியான நாளாக இருக்கும். இயல்பான பணிகள் இயல்பாகவே இருக்கும், பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தகுந்த லாபம் கிடைக்கும்.
வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.
வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த அரசின் சலுகைகள் கிடைக்கும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
ஞாயிறு-
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான முன்னேற்றமான செயல்கள் நடக்கும். தேவையான பண உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அம்மனை வணங்குங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள், நன்மைகள் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.
***********
அவிட்டம் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும்.
உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அதற்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும்.
பூர்வீகச் சொத்துகளை விற்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அலுவலகப் பணிகளில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எதிர்ப்பு தந்த சக ஊழியர்கள் பணிந்து போவார்கள். இடமாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இப்போது இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சமாதானம் ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும்.
இந்த வாரம்-
திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான சலுகைகள், உதவிகள் தேடி வரும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பற்றிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். அது தொடர்பாக இன்று நல்ல தகவல் கிடைக்கும்
செவ்வாய் -
நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகளை இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
புதன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.
வியாழன்-
பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கையும் உண்டு.
வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான தேவையான வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளை வணங்குங்கள். நன்மைகள் நடக்கும்.
*********
சதயம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.
முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனாலும் சமாளிக்க முடியும். வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
ஆரோக்கியப் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். அலுவலக வேலைகளில் இயல்பான நிலையே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு அல்லது வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
தொழில் தொடர்பான வாய்ப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
செவ்வாய்-
தொழில் தொடர்பாக புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனைகளை செய்வீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.
புதன் -
நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவுடன் முடிவுக்கு வரும்.
வியாழன்-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.
வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.
ஞாயிறு-
வீண் விவாதம் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீநடராஜர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago