- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் சனி(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும்.
» துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள், ஜூலை 15 முதல் 21ம் தேதி வரை
» கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள், ஜூலை 15 முதல் 21ம் தேதி வரை
அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.
கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.
வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும்போது வார்த்தைகளை ஜாக்கிரதை உணர்வுடன் பேசுவது நன்மை தரும்.
பெண்கள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் குறையும். அரசியல்வாதிகளுக்கு புதிய வேகம் பிறக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
.*******************************************************************************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும்.
வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும்.
பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள்.
கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மாற்றங்கள் வரும். அரசியல்வாதிகள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
பரிகாரம்: அம்மன் கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
*******************************************************************************
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் .வீண் வாக்குவாதங்கள் அகலும்.
மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கெளரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்து மேலிடத்தில் பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு. வர வேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு கஷ்டங்கள் குறையும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.
************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago