துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள், ஜூலை 15 முதல் 21ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.

ஆன்மிக யாத்திரைகள் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு காரியத் தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணம் வரலாம். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
********************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி(வ) - சுகஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

காரியத் தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

பெண்களது ஆலோசனையைக் கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு ஆன்மிக நாட்டம் உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: குருவுக்கு கொண்டைக்கடலை நிவேதனம் செய்து வணங்குவது வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
*******************************************************************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும்.

காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரைப் பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்யும்படி இருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சிசனை தீரும்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். கலைத்துறையினருக்கு தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மனக் கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
*******************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்