மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், ஜூலை 15 முதல் 21ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.

16ம் தேதி சூர்யன் - சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - பஞ்சம பூர்வ ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.

பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம்.
எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
*******************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது.

பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும்.

பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: மஞ்சள் சாமந்திப்பூவை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக அமைப்பு உள்ளது.
16ம் தேதி சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18ம் தேதி சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும்.

முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும்.
எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த மந்த நிலை மாறும். அரசியல்வாதிகள் தங்களது நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
*******************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்