அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூலை 11ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம்.

ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தாயாரின் உடல் நலத்திலும் தந்தையின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மருத்துவச் செலவு வெகுவாக குறையும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக பாகப்பிரிவினைகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் அளவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் மூலம் பெரிய தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் நடக்காவிட்டாலும் இனிவரும் காலங்களில் நடக்கும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் போன்றவை நடக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கற்ற கல்விக்கு தகுந்த வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழில் தொடங்கும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கான வாய்ப்புகள் கிடைக்கும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
உற்சாகமாக செயல்பட்டு எடுத்த காரியத்தை எளிதாக முடிக்கக் கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு ஆதாயம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் வருமானம் கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். கமிஷன் தொழில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

புதன் -
முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள். சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். எதிர்பார்த்த சுப செய்தி இன்று கிடைக்கும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபராத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ அபிராமிஅன்னையை வணங்கி வாருங்கள். அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********

சித்திரை -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மன சஞ்சலம் ஏற்படுத்திய நோய் பிரச்சினை இல்லாமல் போகும். மீண்டும் உற்சாகமான மன நிலைக்கு வருவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்து, தொழிலுக்குத் தேவையான கடன் உதவி கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். திருமணம் உறுதி செய்யப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். அதன் மூலம் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். அலுவலகப் பணிகளில் மன திருப்தி உண்டாகும். சக ஊழியர்களோடு இணைந்து முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

வியாழன் -
மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படக்கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
பொறுமை நிதானம் மிக அவசியம், உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மட்டும் கவனியுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவிநாயகர் வழிபாடு செய்யுங்கள்.விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***********

சுவாதி -

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.

பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சகோதர வழியில் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

தாய்மாமன் வழி உறவினர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். அலுவலகப் பணியில் சகஜ நிலை நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காணக் கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான பயணங்கள் உறுதி செய்யப்படும்.

செவ்வாய்-
சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்ய வேண்டாம். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -

ஸ்ரீ மகா விஷ்ணு பகவானை வணங்குங்கள். பெருமாளுக்கு பலவித மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்