- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மகம் -
தீவிரமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய வாரம்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலம் சீராக இருக்கும்.
» அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல் 20ம் தேதி வரை)
» ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 14 முதல் 20ம் தேதி வரை)
அலுவலக வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முக்கியமான பணியைச் செய்து முடிப்பீர்கள். அதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளும் சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் சேதி வரும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
புதன் -
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். கமிஷன் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
வியாழன் -
பயணங்கள் எதுவும் செய்ய வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருப்பது மனதிற்கு நல்லது.
வெள்ளி -
அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும்.
சனி -
தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் குறைவாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் தொழில் தொடர்பான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நல்லது நடக்கும்.
*****************
பூரம் -
நன்மைகள் நடக்கும் வாரம். ஆனாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வரவும் செலவும் சமமாகவே இருக்கும். சகோதர வழியில் ஒரு சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். வீடு இடமாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும், கல்வி தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
செவ்வாய் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக உதவி கிடைக்கும்.
புதன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பணத்தை கையாளும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும், வெளி இடத்திலும் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.
வியாழன் -
எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வெள்ளி -
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.
சனி -
வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றுச் சிந்தனை உண்டாகும்.
ஞாயிறு -
தொழில் நிமித்தமான நண்பர்கள் சந்திப்பு ஏற்படும். வியாபார விஷயங்கள் முன்னேற்றத்தைத் தரும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவிஷ்ணு துர்கை வழிபாடு செய்யுங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
****************
உத்திரம் -
எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் எண்ணியபடியே நிறைவேறும்.
பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும். தாய்வழி உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உள்ளது. வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கப் பெறலாம். நல்ல நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபார விஷயங்களில் வெற்றி காண்பார்கள். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. அலுவலகப் பணிகளிலும் இதே நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
புதன் -
உத்தியோகம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் முழுமையான வெற்றியைக் காணக்கூடிய நாளாக இருக்கும்.
வியாழன் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சனி -
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும். சுப விசேஷங்கள் பற்றிய தகவல் உறுதியாகி மன மகிழ்ச்சி உண்டாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ கருடாழ்வார் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago