- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
திருவோணம் -
சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.
பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக மிகப்பெரிய அளவிலான பண ஆதாயம் கிடைக்கும்.
» மூலம், பூராடம், உத்திராடம், வார நட்சத்திர பலன்கள் - மே 30ம் தேதி வரை
» விசாகம், அனுஷம், கேட்டை, வார நட்சத்திர பலன்கள் - மே 30ம் தேதி வரை
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டால் வெற்றியைக் காண முடியும். புதிய வாகனம் வாங்குவதும் நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அதிக முனைப்புடன் பணிபுரிந்து பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
வேறு வேலைக்கு மாறும் முயற்சி சிறப்பாக இருக்கிறது. தொழிலுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகலும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சி உன்னதமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் உருவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
நற்பலன்கள் நடக்கும் நாள். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைக் காண்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஒரு சிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான கடனுதவி இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய் -
பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடனும், அக்கம்பக்கத்தினருடனும் அனுசரித்துச் செல்லவேண்டும். அலுவலகப் பணிகளில் அதிக கவனத்தோடு பணியாற்ற வேண்டும். வியாபாரத்தில் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது.
புதன் -
எதிர்பாராத உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். சுப விசேஷங்கள் பற்றிய ஆலோசனை செய்வீர்கள். தொழில் முறையாக மேற்கொள்ளும் பயணம் ஆதாயம் தருவதாக இருக்கும்.
வியாழன் -
தேவையான உதவிகள் கிடைக்கும் நாள். நெருங்கிய நண்பர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொடுக்க முன்வருவார்கள். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
வெள்ளி -
வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் இன்று ஈடுபட்டால் சாதகமான பதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் அமோகமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடிய நாள். பொருளாதாரப் பிரச்சினைகள் பாதிப்பில்லாத வகையில் இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
சனி -
சிறிய அளவிலான முயற்சியிலேயே மிகப்பெரிய வெற்றியைக் காணக்கூடிய நாள். இன்று எடுத்துக் கொள்ளும் அனைத்து வேலைகளும் முழு வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். ஆதாயம் பலமடங்காக கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரு மடங்கு ஏற்படக்கூடிய நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.
ஞாயிறு -
தேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தி பிரச்சினைகளை உண்டு பண்ண வேண்டாம்.
வணங்க வேண்டிய தெய்வம் -
அபிராமி அம்மனை வழிபாடு செய்யுங்கள். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது நல்ல பலன்களை அதிகப்படுத்தித் தரும்.
****************
அவிட்டம் -
அனைத்து விஷயங்களிலும் சாதனை செய்யக்கூடிய வாரம்.
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதாரப் பிரச்சினை இருக்காது. பணவரவு எதிர்பார்த்ததைப் போலவே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இயல்பான நிலை தொடரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் பெண் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
அதிகச் சலனமில்லாத நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் கிடைக்கும்.
செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். மறந்தே போன பாக்கி ஒன்று திரும்பக் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும்.
புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை. கையாளும் பொருட்களில் அதிக எச்சரிக்கை உணர்வு இருக்கவேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாள்.
வெள்ளி -
சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நாள். திருமணம் உள்ளிட்ட முக்கியமான சுப விசேஷங்கள் பேசி முடிக்கும் வாய்ப்பு உள்ளது. அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டு. சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உறவுகள் பலப்படும்.
சனி -
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளைக் காணக் கூடிய நாள். எதிர்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள். அலுவலகப் பணிகளில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும். ஒரு சிலருக்கு மிகப் பெரிய உதவிகள் தேடி வரும்.
ஞாயிறு -
திட்டமிட்ட காரியங்களும், திட்டமிடாத காரியங்களும் முழுமையான வெற்றியை அடையக் கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். பொருளாதார தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் சுப நிகழ்வு பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களாலும் உறவினர்களாலும் அதிக அளவில் ஆதாயம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவாராஹி அம்மனை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் பாராயணம் செய்யுங்கள். அதிக நன்மைகள் நடக்கும்.
***************
சதயம் -
சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாரம்.
பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பமான மனநிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.
அலுவலகப் பணிகளில் அழுத்தம் அதிகரித்தாலும் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சிக்காக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உள்ளது. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தரக்கூடிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். சொத்துகள் தொடர்பான விஷயங்கள் இன்று சுமுகமாக தீரும்.
செவ்வாய் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். பணவரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
புதன் -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பான வளர்ச்சியையும் நல்ல லாபத்தையும் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கும்.
வியாழன் -
எந்த ஒரு விஷயத்திலும் அவசரத்தை காட்டக்கூடாது. பொறுமையும், நிதானமும் அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்திலும் அக்கம்பக்கத்தினருடனும் வீண் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
வெள்ளி -
தேங்கி நின்ற அலுவலகப் பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். தூரத்து உறவினர் ஒருவரால் தேவையான உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.
சனி -
அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாள். பலவித உதவிகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ஞாயிறு -
அதிகப்படியான நன்மைகள் நடக்கக் கூடிய நாள். மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். திடீர் லாபம் திடீர் அதிர்ஷ்டம் போன்றவை உண்டாகும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள், இவர்களால் ஏதேனும் மிகப் பெரிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீபிரத்தியங்கிரா அம்மன் வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீபிரத்தியங்கிரா அம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள். நன்மைகள் பெருகும். நினைத்தது நிறைவேறும்.
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago