- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.
இதுவரை சந்தித்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் ஆதாயமும் கிடைக்கப்பெறுவீர்கள்.
» அஸ்தம், சித்திரை, சுவாதி, வார நட்சத்திர பலன்கள் - மே 30ம் தேதி வரை
» மகம், பூரம், உத்திரம், வார நட்சத்திர பலன்கள் - மே 24 முதல் 30ம் தேதி வரை
வழக்கு தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் சுமுகமாக தீர்வதற்கு வழி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப ஒற்றுமை பலப்படும். அலுவலகப் பணியில் இயல்பான நிலை தொடரும்.
ஒரு சிலருக்கு வேறு வேலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.தொழில் தொடர்பாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி முன்னேற்ற பாதைக்குத் திரும்பும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் தீரும். தேவையான பண உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு விலகும். கலைஞர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
பொறுமையைக் கையாண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கோபத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். வரவுக்கு மீறிய செலவு ஏற்படக்கூடிய நாள்.
செவ்வாய் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய நபர்களால் வியாபார ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இன்று பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
புதன் -
சிக்கனமாக இருப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய வேண்டியது வரும். வியாபாரத்தில் கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டியது வரும். ஒருசிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்படும்.
வியாழன் -
உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். பழைய கடனை அடைத்து, புதிய கடன் வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.
வெள்ளி -
கவனமாக இருக்க வேண்டிய நாள். தேவையற்ற சர்ச்சைகளை நீங்களாக உருவாக்க வேண்டாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. நிதானமான செயல்பாடு மிக அவசியம்.
சனி -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள்.
ஞாயிறு -
நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநிவாச பெருமாள் வழிபாடு செய்வதும், பெருமாளுக்கு துளசிமாலை கொண்டு தரிசிப்பதும், நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
************
அனுஷம் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகக் கூடிய வாரம்.
பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், மனதில் தேவையற்ற சஞ்சலம் உருவாகும். யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. அதேபோல கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். வாகனத்தை மாற்றிக் கொள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.
தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களும், உணவகத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். நிலத் தரகர் மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.
பெண்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும் வாரம். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பது கூடாது. கடன் வாங்குவதைத் தவிருங்கள். நகைகளை அடகு வைக்க வேண்டாம். பிரச்சினைகளை எப்படியாவது சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாது.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிடைக்கும். சிறப்பான பலன்களும், நன்மைகளும் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும்.
செவ்வாய் -
பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
புதன் -
அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மாற்று மொழி பேசுவோர் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகளைத் தருவார்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் தீரும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வியாழன் -
இயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பணிச்சுமை போன்ற நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்க ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது.
வெள்ளி -
சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு அத்தியாவசியமான ஒரு பொருளை வாங்க வேண்டியது வரும்.
சனி -
எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டாம். குடும்பத்தினர் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
ஞாயிறு -
மனக் குறைகள் நீங்கும்படியாக பணவரவு இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்வதும், பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
****************
கேட்டை -
தாமதப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனி விரைவாக முடியும்.
குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மன வேற்றுமைகள் மறந்து போகும். கடன் பிரச்சினையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் இனி படிப்படியாக கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவீர்கள்.
அலுவலகப் பணிகளில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வந்தவர்கள் இனி நிம்மதியாக வேலையைத் தொடர்வார்கள். வேலை பற்றிய அச்சம் நீங்கும்.
வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். அரசு மற்றும் வங்கியின் உதவி எளிதாகக் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுக்கின்ற முயற்சிகளில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். அதிக முதலீடுகளைச் செய்ய கூடிய தொழில்களை இப்போது தொடவேண்டாம்.
ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியதிருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இனி தேடி வரும்.
இந்த வாரம் -
திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மனநிறைவு ஏற்படக் கூடிய வகையில் பணவரவு இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
செவ்வாய் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி காணக்கூடிய நாள். எனவே எடுத்துக்கொண்ட எந்த முயற்சிகளிலும் முழுமையானக் வெற்றியைக் காண்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
புதன் -
நிதானமாகச் செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். முக்கிய ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். அலுவலகப் பணிகளில் அழுத்தம் அதிகரித்தாலும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும்.
வியாழன் -
மன நிறைவைத் தரக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினையில் சகோதரர்களுடன் சமாதானம் பேசி சாதகமாக பிரச்சினையை முடிப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அனைத்தும் நீங்கும். தாயாரின் உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.
வெள்ளி -
அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். செலவுகள் சற்று அதிகமாக ஏற்படக்கூடிய நாள்.
சனி -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய கடனை அடைத்து புதிய கடன் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாகத் தீரும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிட வேண்டும். நண்பர்களுடன் வெளியே செல்வது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தித் தரும். நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டிய நாள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வது நல்ல பலன்களைத் தரும்.
*************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago