- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
புனர்பூசம் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வாரம். குடும்ப உறவுகள் பலப்படும்.
சகோதரரிடம் ஏற்பட்ட மன வருத்தம் அகலும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதால் ஆதாயம் உண்டாகும்.
» ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, வார நட்சத்திர பலன்கள் - மே 24 முதல் 30ம் தேதி வரை
» அஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - மே 24 முதல் 30ம் தேதி வரை
உத்தியோகத்தில் இருந்த பணிச்சுமை அகலும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக மாறும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
தொழில் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தங்கள் நிறைவேறும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு உண்டு. பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும்.
நிலம் தொடர்பான தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு திருப்திகரமான வருமானம் உண்டாகும். பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும். கலைஞர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் நபர் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவுகளால் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
செவ்வாய் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஒன்று உருவாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் நிம்மதி இருக்காது. மாலை நேரத்தில் கவலை தரும் செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். தேவையற்ற கருத்துகளை எங்கும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.
புதன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக முனைப்போடு செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்படும்.
வியாழன் -
கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் மன நிம்மதியையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.
வெள்ளி -
எதிர்காலம் கருதி சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
சனி -
எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைக் காணக்கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.
ஞாயிறு -
பொறுமை, நிதானம் மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது கூடாது. தேவையற்ற விவாதங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள், அதிக நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
****************
பூசம் -
அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.
குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். அதற்குத் தேவையான பண வரவு தாராளமாக இருக்கும். உறவினர்களாலும், சகோதரர்களாலும் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக மூத்த சகோதரர் தேவையான உதவிகளை செய்து தருவார்.
சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் நிம்மதி நீடிக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். மனதிலிருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்கள் ஆரோக்கியத்திலும் கவனம் எடுப்பது நல்லது. கலைஞர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. சராசரியான நாளாகத்தான் இருக்கும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் சிறிது முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் -
சுறுசுறுப்பாகப் பணியாற்றி வேலைகளை சிறப்பாகச் செய்து முடிக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இன்று கடன் தொடர்பான நல்ல தகவல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.
புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடித்து ஆராய்ந்த பின்பே முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவு எடுத்தால் உங்களுக்கு எதிராகத் திரும்பும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
வியாழன் -
குழப்பங்கள் அனைத்தும் விடைபெறும் நாள். தெளிவான சிந்தனை உருவாகும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும்.
வெள்ளி -
பயணங்களால் ஆதாயம் கிடைக்கக் கூடிய நாள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி உறுதியாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இன்று கையெழுத்தாகும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
சனி -
திட்டமிட்டு சில விஷயங்களை முடித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு திட்டம் தீட்டுவீர்கள்.
ஞாயிறு -
திட்டமிட்ட காரியங் களும் திட்டமிடாத காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பணவரவு எதிர்பாராத வகையில் தாராளமாக இருக்கும். பழைய கடன் அடைக்க வாய்ப்பு உண்டு. புதிய கடன் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களாலும் உறவினர்களாலும் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். மொத்தத்தில் மனநிறைவான நாளாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட நன்மைகள் தரும்.
******************
ஆயில்யம் -
மன நிம்மதிக்கு குறையில்லாத வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடுவீர்கள். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பதவி உயர்வு உள்ளிட்டவை உங்களைத் தேடி வர இருக்கிறது. எனவே அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தி சிறப்பாக பணியாற்றுங்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களில் சுமுகமான முடிவு ஏற்படும். திருமண முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரரிடம் ஏற்பட்டிருந்த மன வருத்தம் தீரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். குழுவாக பணியாற்றுபவர்களுக்கு இன்று எடுத்துக்கொண்ட பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
புதன் -
எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வங்கியில் எதிர்பார்த்திருந்த கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு பலரும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். குடும்பத்தில் மூத்தவர் ஒருவரால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன் -
பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கையாள வேண்டும். எதிர்வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம்.
வெள்ளி -
முடிக்காமல் இருந்த அனைத்து வேலைகளையும் இன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதரர்களால் கிடைக்கும்.
சனி -
வியாபார நிமித்தமான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்களும் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தொடர்பான மன நிறைவைத் தரும் தகவல் கிடைக்கும்.
ஞாயிறு -
மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பரபரப்பாக இருப்பீர்கள். எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். எதிர்காலம் கருதி சில திட்டங்களை வகுப்பீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசி சில விஷயங்களை சரி செய்து கொள்வீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப்பெருமானை வணங்குங்கள். சண்முக கவசம் படியுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago