- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
பெருமளவு நன்மைகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
மனதை வருத்திக் கொண்டிருந்த மன பாரங்கள் அகலும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
» அஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - மே 24 முதல் 30ம் தேதி வரை
» மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள் - மே 20 முதல் 26ம் தேதி வரை
சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனைவிவழி உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். சக ஊழியர்களின் உதவியுடன் முக்கியமான பணிகளை முடித்துக் கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.
தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வாகனம் தொடர்பான தொழில் மற்றும் உணவகம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பராமரிப்புப் பணி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
வியாபாரம் படிப்படியாக சீரான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலை தொடர்பான தகவல் உறுதியாகும். சுயதொழில் தொடங்குவது தொடர்பாக எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
மனமகிழ்ச்சி தரும்படியான சம்பவங்கள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.
செவ்வாய் -
எதிர்காலம் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகளும் இன்று சுமுகமாக முடிவுக்கு வரும். தந்தை வழி உறவுகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகப் பேசி முடிக்கப்படும்.
புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவுகள் எதிர்பாராத வகையில் இருக்கும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகளும் ஏற்படும். வாகனப் பழுது ஏற்படும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அலுவலகப் பணிகளில் நிதானமாக பணியாற்ற வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும்.
வியாழன் -
மனசஞ்சலம் ஏற்படும். பயணங்களில் கவனம் வேண்டும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
வெள்ளி -
கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தடைபட்டிருந்த பணவரவு இன்று சரளமாகக் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். சுப விசேஷங்கள் பற்றிய தகவல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
சனி -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.
ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை வருத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். பெருமாளுக்கு பலவித மலர்கள் சாற்றி வழிபடுவது அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
**********
மிருகசீரிடம் -
தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.
மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வருமானம் தொடர்பாக அலைச்சல் அதிகமாக ஏற்படும், அதன் காரணமாக உடல் சோர்வு அசதி ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவs செலவுகள் உண்டு.
அலுவலகப் பணியில் இயல்பான நிலை இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.
பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும்., வேலையில்லாத பெண்களுக்கு தற்போது வேலை கிடைக்கும் வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு. தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக் கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு ஏற்படும்.
செவ்வாய் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.
வியாழன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்களைத் தவிர்ப்பது நல்லது.
வெள்ளி -
தாமதமான பணிகள் அனைத்தும் இன்று விரைவாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சொத்துச் சேர்க்கை அல்லது ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
சனி -
எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் தாமாக முன்வந்து உதவுவார்கள். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************
திருவாதிரை -
தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும் வாரம். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியினர் இப்போது மீண்டும் ஒன்று சேர்வார்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்ற சிந்தனை உருவாகும்.
அலுவலகப் பணிகளில் இதுவரை நெருக்கடி தந்து கொண்டிருந்த உயரதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அல்லது நீங்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக அயல்நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிறு தொழில் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்தநிலை நீங்கி மீண்டும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும்.
வங்கியில் கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்குக் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது கூட்டாளிகளை விடுத்து தனியாக தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டு.
பெண்களுக்கு எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும்.
செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.பிறகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.
புதன் -
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். வழக்கு தொடர்பான விஷயங்கள் ஏதும் இருந்தால் முடிந்த வரை தள்ளிப் போடுங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள்.
வியாழன் -
அவசரமான முடிவுகளை எடுக்கக் கூடாது. அலுவலகத்தில் நிதானமாகச் செயல்படுங்கள். வங்கியில் பணி புரிபவர்கள் பணத்தைக் கையாளும்போது அதிக கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருந்தால் இந்த நாள் மிக எளிதாக கடந்து செல்லும்.
சனி -
மனதில் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் விலகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு சரியான நேரத்தில் கிடைக்கும்.
ஞாயிறு -
வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்கள் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத பணவரவு ஒரு சிலருக்குக் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள், பிரத்தியங்கிரா மூல மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அதிக நன்மை ஏற்படும்.
*************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago