- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
முயற்சி செய்து பாதியில் நின்ற அனைத்துப் பணிகளும் இப்போது படிப்படியாக நிறைவேறும். அந்த முயற்சிகளின் மூலம் ஆதாயத்தையும் அடைவீர்கள்.
சொத்துச் சேர்க்கை ஏற்படும். விற்க முடியாமல் இருந்த சொத்துகள் விற்பனையாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றத்தைக் காணலாம். தேவையான முதலீடுகள் கிடைக்கும்.
» உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 13
» மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள் - மே 20 முதல் 26ம் தேதி வரை
அயல்நாடு தொடர்புடைய பணிகள் செய்து வந்தாலும் தொழில் செய்து வந்தாலும் இப்போது மிகச்சிறப்பான முன்னேற்றத்தையும், வருமானத்தையும் காணலாம்.
வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இந்த வாரம் புத்திர பாக்கியம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் புதிய ஒப்பந்தம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நாள். வருமானம் பல வழிகளிலும் வரும். எந்த முயற்சியிலும் முழு வெற்றியைக் காண முடியும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஒப்பந்தங்களாக மாறும். வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக் கூடிய நாள்.
செவ்வாய் -
முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றியைக் காணலாம். பண வரவுகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும்.
புதன் -
மனதில் உற்சாகம் பிறக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் மன திருப்தி உண்டாகும். பணவரவு சரளமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய விசேஷங்கள் முடிவாக கூடிய நாள். தொழில் தொடர்பான முதலீடுகள் உறுதியாகும்.
வியாழன் -
திட்டமிடாத காரியங்களிலும் சாதிக்கக்கூடிய நாள். பணம் பலவழிகளிலும் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் மிக எளிதாக முடியும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் முடிவு செய்யப்படும்.
வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும், அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய நாள். எச்சரிக்கை உணர்வு மிக மிக அவசியம். பணத்தைக் கையாளும்போது கவனம் தேவை. விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும்போதும் அதிக எச்சரிக்கை உணர்வு வேண்டும். போக்குவரத்தில் சிந்தனைகளைச் சிதறவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். பாகப்பிரிவினைகள் தொடர்பான விஷயங்கள் சுமுகமாகப் பேசி முடிக்கப்படும்.
ஞாயிறு -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு நண்பர்களால் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். மிகச் சிறந்த நன்மைகளை உண்டாக்கும்.
*************************
பரணி -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.
குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்பு முழுமையாக விலகும். இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் தீரும்.
குழந்தைகளின் கல்வி ஆர்வம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு. வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகளைத் தவற விடவேண்டாம். சுயமாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் உண்டு.
சூழ்நிலைகளைப் பொறுத்து தனியாக தொழில் தொடங்குவது நல்லது. வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு மனநிறைவு ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
தேவையான உதவிகள் கிடைக்கும். உயர்கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதில் நாடு தொடர்புடைய கல்விக்கு முயற்சி செய்தவர்களுக்கு அந்த முயற்சிக்கு இப்போது முழுமையான வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடிய நாள், வீண் விரயங்கள் அதிகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கு வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
செவ்வாய் -
தாமதமாகிக் கொண்டிருந்த அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தரகு தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.
புதன் -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் எதிர்பாராத விதமாக செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். நிதானப் போக்கை கடைபிடிப்பது மிகவும் நல்லது.
வியாழன் -
கடந்த சில நாட்களாக நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மனதில் நிம்மதியும் நம்பிக்கையும் பிறக்கும். அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி -
வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களில் இன்று ஈடுபட்டால் சாதகமான நிலை ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சிறு வியாபாரிகள் முதல் மிகப் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் மிக அதிகப்படியான லாபம் கிடைக்கக்கூடிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கியமான தகவல் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும்.
சனி -
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
ஞாயிறு -
பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும். அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுங்கள்.நன்மைகள் பெருகும்.
*****************
கார்த்திகை -
நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
தாயாரின் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அல்லது இப்போது இருக்கும் வியாபார இடத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும்.
பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தாமதமான புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். கல்வி தொடர்பாக சக மாணவர்களின் உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மனநிம்மதியை தரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டானாலும், வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சியை இன்று தொடங்குவது நல்ல பலனைத் தரும்.
செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை கடைப் பிடித்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
புதன் -
செயல்களில் நிதானம் தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
சனி -
அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்தும் நாள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். நண்பர்கள் தொழில் தொடர்பான உதவிகளைச் செய்து தருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago