- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் காணாமல் போவார்கள். இதுவரை இருந்துவந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. இருந்தாலும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும்.
» அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள்; மே 10 முதல் 16ம் தேதி வரை
» மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (மே 10 முதல் 16ம் தேதி வரை)
மனதில் இருந்த சஞ்சலங்கள் அகன்று மன தைரியம் பிறக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். படிப்படியாக பிரச்சினைகள் அகலும். அரசு நிர்ப்பந்தங்கள், பிரச்சினைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய நாள். ஆதாயம் அதிகமாக இருக்கும். எதிர்பாராத வருமானங்கள் ஒரு சிலருக்குக் கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கக்கூடிய நாள்.
செவ்வாய் -
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகன்று மீண்டும் நட்பு ஏற்படும். கமிஷன் தொழிலில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
புதன் -
தேவையற்ற விவாதம் செய்யாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். குடும்பத்தினரிடம் இணக்கமாக இருங்கள். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.
வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.
வெள்ளி -
திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதி முடிவாகும் வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இன்று குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு தொடங்குவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்--குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.
**************
அனுஷம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். அதேபோல புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் அதிகம். தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் இயல்பான நிலை இருக்கும்.
உங்களுடைய பணிகளில் ஏற்பட்ட தொய்வு நிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும், எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் அல்லது வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
உற்சாகத்தோடு பணிபுரியக் கூடிய நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் தொடர்பாக கடன் கிடைக்கும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அழுத்தங்கள் குறையும்.
செவ்வாய்-
பொறுமையோடு நிதானத்தையும் கடைபிடிக்கவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தொழில் தொடர்பாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள்.
புதன் -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான நிலை தொடரும். சுப விசேஷங்கள் முடிவாகும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் உண்டு.
வியாழன் -
அதிக அளவு நன்மைகள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
வெள்ளி -
இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார விஷயமாக ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.
சனி-
நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சந்திப்புகள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். அதிகப்படியான நன்மைகளைத் தரும்.
*****************
கேட்டை -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். குடும்பத்தில் அமைதி நிலவும்.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் ஏதும் இருந்தால் சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது, வீணாக வழக்கு போன்ற விஷயங்களில் இறங்க வேண்டாம்.
நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஏதும் வந்தால் இன்னும் சில காலத்திற்கு தள்ளி வையுங்கள். ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் தொழிலைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபாரக் கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. அதேசமயம் வருமானத்திலும் தடை இருக்காது. வரவும் செலவும் சமமாக இருக்கும். முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் சுபமாக முடியும்.
செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
புதன் -
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகும்.
வியாழன் -
நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். சிறு தூரப் பயணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி-
அத்தியாவசியப் பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.
சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். அலுவல் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும்.
ஞாயிறு-
செய்கின்ற செயல்களின் திருப்தி ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். நல்ல பலன்களைத் தரும்.
************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago