- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து நன்மைகளையும், வளமான வாழ்வையும் தரவேண்டுமென எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
ரோகிணி -
» அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல் 18ம் தேதி வரை)
» இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
உற்சாகமான வாரமாக இருக்கும்.
மனதில் நம்பிக்கை பிறக்கும். குடும்பப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் படிப்படியாக வளர்ச்சியைத் தரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மாறி இனி வியாபாரம் நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
பெண்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்வியைத் தவிர வேறு நாட்டங்கள் ஏற்படும், கவனமாக இருக்கவேண்டும். கலைஞர்களுக்கு ஒரு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாள். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே திருப்திகரமாக இருக்கும்.
செவ்வாய் -
நிதானமாக செயல்பட்டு அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்ள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களின் விடுப்பு காரணமாக அவருடைய பணியையும் சேர்த்து செய்ய வேண்டியது வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கு அவசியம்.
புதன் -
எதிர்பாராத நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். சுபகாரிய விஷயங்கள் முடிவாகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாழன் -
பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூமி தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வெள்ளி -
சிறப்பான நாளாக இருக்கும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஒருசிலருக்கு திடீர் வாய்ப்பாக புதிய வியாபார வாய்ப்பு கிடைக்கும்.
சனி -
எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் மிக உதவிகரமாக இருப்பார்கள். நெருங்கிய உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவீர்கள்.
ஞாயிறு -
குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடுவது நல்லது. வெளியில் எங்கும் செல்லவேண்டாம். வீட்டில் இருந்தாலும் கூட பொறுமையுடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டும். கோபத்தைக் காட்டக் கூடாது. செலவுகள் ஏற்பட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாக கிடைக்கும்.
*******************
மிருகசீரிடம் -
எண்ணங்கள் பூர்த்தியடைந்து மனமகிழ்ச்சி அடையும் வாரம்.
நினைத்ததை நினைத்தபடியே செய்து முடித்து மன நிம்மதி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
சொத்து தொடர்பான விஷயங்கள் எளிதாகப் பேசி தீர்க்க வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அகன்று முன்னேற்றப் பாதைக்குச் செல்லும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும்.
கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் நண்பர்களால் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
செவ்வாய் -
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாகத் தீரும்.
புதன் -
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வியாழன் -
எதிர்பாராத உதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும்.
வெள்ளி -
சுபவிசேஷங்கள் பற்றிய தகவல்கள் மனதுக்கு நிறைவைத் தரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பணப்புழக்கம் உயரும் நாள்.
சனி -
அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பலவித நன்மைகள் நடைபெறக்கூடிய நாள்.
ஞாயிறு -
செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். வரவும் வரவுக்கு மீறிய செலவும் உண்டாகும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
**************
திருவாதிரை -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.
உற்சாகமான மனநிலை இருப்பதால் எடுத்துக்கொண்ட எல்லா வேலைகளிலும் முழுமையான நன்மைகள் கிடைக்கும்.
குடும்பப் பிரச்சினைகள் சுமுகமாக தீரும். சுபகாரிய விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புத்திரபாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.
அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள்.
தொழிலில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகி தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பாராத சொத்துச் சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சகோதரர் பக்கபலமாக இருப்பார். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் எளிதாக முடியும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய தொழில் அல்லது வியாபார வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளது.
செவ்வாய் -
இயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகை ஏற்படும்.
புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார நிமித்தமாக ஏற்படும் பயணம் லாபகரமாக இருக்கும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
வியாழன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தோடு செயல்பட வேண்டும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றவேண்டும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணத்தை கையாளும்போது அதிக கவனமாக இருப்பது நல்லது.
வெள்ளி -
பண உதவிகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிட்டும். சொத்துகளால் லாபம் கிடைக்கும்.
சனி -
புதிய நபர்களைச் சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கும். அநாவசியச் செலவுகள் இனி இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள்.
ஞாயிறு -
நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒரு சிலருக்கு உண்டு. நண்பர்கள் தொழில் ரீதியாக மிகப்பெரிய உதவியைச் செய்து தருவார்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நன்மைகள் நடைபெறக்கூடிய நாள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஐயப்பனை வணங்குங்கள். ஐயப்ப சுவாமிக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago