- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மூலம் -
விரும்பிய செயல்கள் விரும்பியபடியே நடக்கக்கூடிய வாரம்.
எந்த முயற்சி எடுத்தாலும் முழுமையான வெற்றியைக் காணலாம். இதுவரை தடைப்பட்டிருந்த அனைத்துக் காரியங்களும் இனி தடையில்லாமல் நடக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலமாக முக்கிய தேவைகள் பூர்த்தியாகும்.
அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த அழுத்தங்கள் முற்றிலுமாக மாறும். தொல்லை தந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் இடம் மாறிச் செல்வார்கள். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு அயல்நாட்டில் இருந்து முதலீடுகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கலாம்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். தற்போது இருக்கக்கூடிய வியாபாரத்தை விரிவுபடுத்தவும், புதிய கிளைகள் தொடங்கவும் தேவையான உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும் வாரம். சொத்து தொடர்பான பிரச்சினைகள் மிக எளிதாகத் தீரும். சொந்தத் தொழில் தொடங்குவது சிறிய அளவிலான வியாபாரங்களைச் செய்வது போன்றவை நடக்கும். வருமானத்திற்கான வழி வகைகள் அனைத்தும் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
பரபரப்பாக இயங்கி பல வேலைகளையும் முடிக்கக் கூடிய நாள். உண்பதற்குக் கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி உழைக்க வேண்டியதிருக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் நன்மைகள் நடக்கக்கூடிய நாள். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
செவ்வாய் -
திடீர் பண வரவுகளால் மனம் மகிழும் நாள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சிறிய அளவிலான முயற்சியிலேயே அதிகப்படியான வருமானம் ஈட்டக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நண்பர்களால் ஆதாயமுண்டு. அலுவலகப் பணியில் நிம்மதி உண்டாகும்.
புதன் -
அலுவலகப் பணியில் சக ஊழியர்களின் வேலைகளை பார்க்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சராசரி போக்கு இருக்கும், லாபத்தை குறைத்து கொண்டு வியாபாரம் செய்வது நல்ல பலனைத் தரும்.
வியாழன் -
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியை சந்திக்கக்கூடிய நாள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் தேடி வரும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
வெள்ளி -
குடும்பத்தினருடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும் நிதானப் போக்கை கடைபிடியுங்கள். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணத்தை கையாளும் போது அதிக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
சனி -
தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
ஞாயிறு -
நெருங்கிய நண்பர்கள் மூலமாக உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும் நாள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
***********************
பூராடம் -
எடுத்துக்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணக்கூடிய வாரம்.
சிறப்பான நன்மைகள் இருப்பது மட்டுமல்லாமல் திருப்தியான வருமானமும் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லாமல் மன நிம்மதியை தரக்கூடிய வாரமாகவும் இருக்கும்.
தந்தை வழி சொத்துகள் தொடர்பாக பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலையில் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேறு தொழில் நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும். சகோதரரிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் தீரும். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். அதற்கு தேவையான அனைத்து வகை உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
பலவித நன்மைகள் தேடி வரக்கூடிய நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து மனநிறைவு கொள்ளும் நாள் அலுவலகப் பணிகளில் சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள் வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள்.
புதன் -
அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் உடனே எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கடன் கொடுப்பது கூடாது. குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்.
வியாழன் -
கமிஷன் தொடர்பான தொழில் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் எளிதாக முடிவுக்கு வரும். சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கக் கூடிய நாள்.
வெள்ளி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் பற்றிய அச்சம் தோன்றும். வீணாக மன சஞ்சலம் ஏற்படும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
சனி -
பணவரவு சரளமாக இருக்கக்கூடிய நாள். முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி நன்றாகவே இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.
ஞாயிறு -
செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும். வீண் செலவுகளைச் செய்ய வேண்டாம். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாக இருக்கும். அலைச்சல் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரை வணங்குங்கள். தாயாருக்கு வெண்தாமரை மலர்கள் சார்த்தி, அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************
உத்திராடம் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறக் கூடிய வாரமாக இருக்கும்.
கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.
சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடங்கும். தாமதமாகிக் கொண்டிருந்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும்.
அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
தொழில் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளது. வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.
பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சுணக்கம் காட்டாமல் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பாராத பண வரவு உண்டாகும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில்முறை பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. அது வீட்டு உபயோகப் பொருளாகவும் இருக்கலாம். தொழிலுக்குத் தேவையான பொருட்களாகவும் இருக்கலாம்.
செவ்வாய் -
மன நிறைவைத் தரக் கூடிய நாள். குழப்பங்கள் தீரும். பணவரவு தாராளமாக இருக்கும். இன்று எடுத்து செய்யும் அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வியாழன் -
பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரப் பயணங்களில் ஆதாயம் கிடைக்கும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பண வரவு ஏற்படும்.
வெள்ளி -
உறவினர்கள் நண்பர்கள் என பலருக்கும் உதவிகள் செய்ய வேண்டியது இருக்கும். சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
சனி -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த வியாபாரம் தொடர்பான செய்தி கிடைக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் உடல்நலம் திருப்திகரமான முறையில் முன்னேற்றம் ஏற்படும்.
ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வீட்டு பராமரிப்புச் செலவுகள் செய்வது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய பகவான் வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். தடைகள் அகலும். நன்மைகள் பெருகும்.
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago