- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
திருவோணம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும் வாரம்.
பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், சச்சரவுகள் அகலும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
திருமணம் தொடர்பான விஷயங்களில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டடப் பணிகள் மீண்டும் தொடரும். புதிதாக வீடு வாங்கும் முயற்சி சாதகமாக அமையும்.
அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக் கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
செவ்வாய் -
உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
புதன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.
வியாழன் -
உத்தியோகத்தில் பணி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி -
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்புகள் செய்யும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை இல்லாத பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் மாறும்.
சனி -
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். குலதெய்வ வழிபாடு பற்றிய சிந்தனை ஏற்படும்.
ஞாயிறு -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருப்பதும், குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிடுவதும் நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************
அவிட்டம் -
தீவிர முயற்சிகளை எடுத்து வெற்றிகளைக் காண வேண்டிய வாரம்.
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கிடைக்கும். சகோதரர் உங்களுக்கு பல வகையிலும் உதவி செய்வார்.
இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாற்றும் முயற்சியும் சாதகமாக இருக்கும். தொல்லை தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். இதுவரை தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு பற்றிய தகவல் உறுதியாகும்.
சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார இடங்களை விரிவுபடுத்துவது போன்றவை நடக்கும். அதற்குத் தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நெருங்கிய நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். அலுவலகப் பணியில் கூடுதல் சுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். மாலை நேரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
செவ்வாய் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
புதன் -
எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து செயல்படுங்கள். செலவு அதிகமாக ஏற்படும்.
வியாழன் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீர்வதற்கான வழி வகைகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
சனி -
பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீகருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் கேளுங்கள். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
**************
சதயம் -
அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம் இது.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் தகவல் கிடைக்கும்.
குடும்பத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுக முடிவு எட்டப்படும். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துகள் இப்போது விற்பனையாகும்.
அலுவலகத்தில் இயல்பான நிலை தொடரும். இடமாற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதி தரும்.
உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மீண்டும் தொழில் சூடுபிடிக்கும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இப்போது உடனடியாகக் கிடைக்கும்.
வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். அரசு வழி உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து வாங்குவது விற்பது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். புதிதாக கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும்.
செவ்வாய் -
அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் இழுபறி இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். அநாவசியச் செலவுகள் ஏற்படும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
புதன் -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.
வியாழன் -
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையைக் கையாள வேண்டும். பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
சனி -
வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். இல்லத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியது வரும்.
ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பண உதவி இன்று கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு மன நிறைவான வருமானம் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago