வார நட்சத்திர பலன்கள் - புனர்பூசம், பூசம், ஆயில்யம் (மார்ச் 22 முதல் 28ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -

பெரும் முயற்சிகளுக்குப் பிறகு வெற்றிகளை குவிக்கும் வாரம்.

எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் ஒரு சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியது வரும். எதையும் நிதானமாகக் கையாள வேண்டும்.

அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். அலுவலகப் பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாகவே இருக்கும்.

தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான சந்திப்புக்கள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். பயணம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கும், உணவுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்கள் அளவான முதலீடுகளைச் செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் உறுதியாகும்.

வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். அந்த பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாகவே இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உதவியோடு ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்து முடிப்பீர்கள்.

செவ்வாய் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
எடுத்துக் கொண்ட வேலைகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடனுதவி அல்லது முதலீடுகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாகும்.

வியாழன் -
செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்ப்பை பூர்த்தி தாமதமாகலாம். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மனம் மகிழும் நாள். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சனி -
நிதானம் காக்க வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஞாயிறு -
தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தியாகும். குழந்தைகள் விரும்பியதை வாங்கித் தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீராமபிரானை வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். நன்மைகள் பெருகும்.
*************

பூசம் -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். இல்லத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சொந்த வீடு கனவு நனவாக கூடிய காலம் நெருங்கிவிட்டது. அதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு வேலை பற்றிய முன்னேற்றமான தகவல் உறுதியாகும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும் வாரமாக இருக்கும். தாமதப்பட்டு வந்த திருமணம் இப்போது உறுதியாகும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு மிகப் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் எந்த வாய்ப்புகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வது நல்ல பலனைத்தரும். பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த தொகை கைக்கு வந்து சேரும்.

இந்த வாரம்-

திங்கள் -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் -
பொறுமை அவசியம். நிதானமாக எந்தச் செயலையும் செய்ய வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும், வெளியிடத்திலும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிம்மதி தரும். வேலை மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

வியாழன் -
தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருக்காக மகிழ்ச்சிகரமான செலவுகள் செய்வீர்கள்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு இருக்கும். வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். மனநிறைவு ஏற்படக்கூடிய வீடு அல்லது மனை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.

சனி -
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

ஞாயிறு -
வீண்செலவுகள் ஏற்படும். மன சங்கடங்கள் ஏற்படும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இறைவழிபாடு மனநிம்மதியைத் தரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
குருபகவான் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும்.
***************

ஆயில்யம் -

மன நிறைவைத் தரக் கூடிய சிறப்பான சம்பவங்கள் நடக்கக் கூடிய வாரம்.

எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு மனநிறைவைத் தரக்கூடிய வாரமாக இருக்கும். சுய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் தகுந்த உதவிகளைச் செய்து தருவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மிகச் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். கல்விக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு சிறந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய அளவில் வருமானம் இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
சிறப்பான நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆதாயம் தரக்கூடிய காரியங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சிறு வியாபாரங்களில் அதிக ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மனநிறைவைத் தரும்.

புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
சிறப்பான நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும்.

வெள்ளி-
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். வியாபாரப் பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீபைரவர் வழிபாடு செய்வது மிகுந்த நன்மையைத் தரும். நினைத்தது நிறைவேறும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்