மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

அதிக நன்மைகள் நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் பேசி தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப விசேஷங்கள் உறுதியாகும்.

தாய்வழி உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும்.

இந்த வாரம் -
திங்கள்-

குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். பெண்கள் தங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய்-
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். முயற்சித்த எந்த வேலையும் சரியாக நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன்-
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.

வியாழன்-
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபார வழிவகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திடீர் பயணங்கள் ஏற்படும்.

வெள்ளி-
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள், அலட்சியமாக இருந்தால் சங்கடங்களைச் சந்திக்க வேண்டியது வரும். எவரிடமும் கோபத்தைக் காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படும்.

சனி-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
துர்கை வழிபாடு செய்யுங்கள். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*********************

பூராடம் -தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். பணத்தேவைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் வாய்ப்புகள் அல்லது வியாபார வாய்ப்புகள் தேடி வரும்.

அலுவலகப் பணியில் பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் போன்றவை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் சாதகமாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

உங்களுடைய வியாபார திறமைகளை வெளிப்படுத்தி புதிய உத்திகளைக் கையாண்டு வளர்ச்சியை நோக்கி செல்வீர்கள். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள். வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். தொலைதூர நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
உங்கள் பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அலுவலகத்திலும், பொது வெளியிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும். கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள வேண்டாம்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். சகோதர வழியில் தேவையான உதவிகளும் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். நண்பர்கள் பொருளாதாரம் சார்ந்த உதவிகளை செய்து தருவார்கள்.

வெள்ளி -
அலுவலகப் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். எந்த ஒரு விஷயத்திலும் கவனமாகச் செயல்பட வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் பணிகளை முடித்து உயர் அதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். அவசியமற்ற சந்திப்புகள் செய்யவேண்டாம். கடன் தொடர்பான பிரச்சினைகளில் சமாதானமாக செல்ல வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். ஸ்ரீவாராஹி மூல மந்திரத்தை உச்சரியுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
************************

உத்திராடம் -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் சுமுக முடிவுக்கு வரும்.

தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும்.
அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். இப்போது முயற்சியை மேற்கொண்டால் வெகு விரைவில் பணி ஆணை கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கட்டுமான நிறுவனங்கள் சேவை சார்ந்த தொழில் போன்றவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்காலம் பற்றிய கவலை தீரும் அளவுக்கு நன்மைகள் நடைபெறும் வாரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். நெருங்கிய உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். செலவுகளை கட்டுப்படுத்த பட முடியாமல் இருக்கும். முடிந்தவரை சிக்கனமாக இருங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்த்து விடுங்கள்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்துகள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும்.

ஞாயிறு -
மனக் குழப்பங்களில் இருந்து வெளி வருவீர்கள். எதிர்பார்த்த பண உதவி கடைசி நேரத்தில் கிடைக்கும். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வியாபார வாய்ப்பு ஒன்று முடிவாகும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கருடாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்