- ’சொல்வாக்கு ஜோதிடர் ’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரக்கூடிய வாரமாக இருக்கும்.
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.
» துக்கமெல்லாம் தீர்க்கும் துர்கை ஸ்லோகம்!
» பிறந்தால், இருந்தால், இறந்தால் முக்தி; எறும்புகள் வழிகாட்டிய தென்காசி தல மகிமை!
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும். வேலை தொடர்பாக இடமாற்றம் விரும்பி இருந்தாலும் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாலும் இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். சிறிய அளவிலான வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
அலுவலகப் பணிகளில் அமைதியான போக்கு இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி பணிகளை விரைவாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும் சகோதரர்கள் பொருளாதார உதவிகளைச் செய்து தருவார்கள். பிரச்சினைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமும் தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்
இந்த வாரம் -
திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தங்கள் போடுவீர்கள். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.
செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும். வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும்.
புதன்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபாரப் பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும்.
வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய அலட்சியம் பெரிய அளவிலான பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லும்.
வெள்ளி-
நண்பர்களால் நற் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக மாற்று ஏற்பாடுகளை செய்வீர்கள்.
சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் சமாதானம் பேசுவதற்காக உறவினர் ஒருவர் முன்வந்து உதவுவார்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கேட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************
மிருகசீரிடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.
சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பாக அரசின் சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். கவனமாக இருக்கவேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.
வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ஞாயிறு -
பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பைரவரை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*******************
திருவாதிரை -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பாகப்பிரிவினைகள் இப்போது முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே இருக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
தொழிலில் எதிர்பாராத அளவுக்கு உதவிகள் கிடைக்கும் அரசு சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். அதிக முயற்சிகள் மேற்கொள்ளாமலேயே அனைத்து வேலைகளும் முடியும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும்.
புதன் -
நிதானமாகச் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். வியாபார பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும். பயணங்களில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.
வெள்ளி -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பை தராத வகையில் இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். சிறு தூரப் பயணம் மேற்கொண்டு அதில் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானையும் விஷ்ணுவையும் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago