பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 14 முதல் 20ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -

நினைத்தது நிறைவேறும் வாரம்.

பணவரவு சரளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் முற்றிலுமாகத் தீரும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். அந்த முயற்சிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக் கூடிய அளவிலேயே இந்த வாரம் இருக்கிறது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் வருமானம் கிடைக்கும்.

சிறிய அளவிலான முயற்சியிலேயே பெரிய வெற்றியைக் காணக்கூடிய வாரமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் மாறும். அலுவலக நண்பர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள்.

தொழிலில் இருந்த இறுக்கமான சூழ்நிலைகள் விலகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள்.

பெண்களுக்கு இதுவரை இருந்த உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இந்த வாரம் புத்திர பாக்கியம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு இந்த வாரம் புதிய ஒப்பந்தம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைத் தரக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் தீரும்.

புதன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகன பழுது, வீட்டு பராமரிப்புச் செலவுகள் என அதிகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும்.

வியாழன் -
பண வரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியை எதிர்பார்த்த படியே இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மன நிம்மதியை தரக்கூடியதாக இருக்கும்.

வெள்ளி -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையைச் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். பாகப்பிரிவினைகள் தொடர்பான விஷயங்கள் சுமுகமாகப் பேசி முடிக்கப்படும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். நண்பர்களால் ஒரு சில ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகமாகும்.
********************

உத்திரட்டாதி -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.
குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்பு முழுமையாக விலகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

இல்லத்திற்கு உறவினர் வருகை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கவும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்துகளால் வருமானம் தரக் கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும்.

முயற்சியில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் அகலும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். அலுவலகப் பணிகள் இயல்பாக இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வெளிநாடு தொடர்பு உடைய நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்தால் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரு மடங்காக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தேவையான உதவிகளும் முதலீடுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

புதன் -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். நிதானப் போக்கை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

வியாழன் -
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் கவனித்து வாருங்கள். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது.

சனி -
இதுவரை முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாகச் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

ஞாயிறு -
பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும், அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டி வழிபட்டால் சிரமங்கள் முழுமையாக நீங்கும்.
**********************

ரேவதி -

நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம்.

பணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.

சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தாயாரின் உதவிகள் கிடைக்கும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அல்லது இப்போது இருக்கும் வியாபார இடத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு சுயதொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தாமதமான புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் பெண் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மனநிம்மதியைத் தரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டாகும். வீட்டு உபயோகப் பொருட்கள் புதிதாக வாங்கும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

புதன் -
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். தொழிலுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த நபரை இன்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி தாமதம் ஆகலாம்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். நண்பர்கள் தொழில் தொடர்பான உதவிகளைச் செய்து தருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநடராஜர் வழிபாடு செய்யுங்கள், நடராஜருக்கு மலர் மாலைகள் சூட்டி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்