ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 2 முதல் - 8 ம் தேதி வரை) 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -

மனதில் புதிய நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும்.

குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு சில முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் ஏற்படும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

தொழிலில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி் உறுதி்செய்யப்படும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாகக் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் இன்று கிடைக்கும். அதனால் உற்சாகத்தை அடைவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் தொடர்பு கொள்வார்கள். ஒருசிலருக்கு திடீர் பயணங்கள் உண்டாகும்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். திருமணம் தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியது வரும்.

புதன்-
எண்ணியதை எண்ணியபடி செய்து முடிக்கும் நாள். பணம் பல வழிகளில் வரும். மன உற்சாகம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வியாழன்-
சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். சகோதர வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வெள்ளி-
எந்த விஷயத்திலும் பொறுமையைக் கையாளவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக எச்சரிக்கையும் கூடுதல் கவனமும் தேவை. வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

சனி-
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். நண்பர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப் பெருமானை வணங்குங்கள். முருகக் கடவுளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************

மிருகசீரிடம் -

சுறுசுறுப்பாகப் பணியாற்றி எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.

மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும். மனதில் இருந்த அச்ச உணர்வுகள் முழுமையாக விலகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சுபகாரிய விசேஷங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
பணவரவு தாராளமாக இருக்கும். எந்த முயற்சிகளிலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

செவ்வாய்-
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதன்-
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும் தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான ஒரு சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

வியாழன்-
மனநிறைவு தரும்படியான காரியங்களைச் செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுப்பீர்கள். அலுவலக வேலைகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நிதானமான வளர்ச்சியும், லாபமும் இருக்கும். சற்று நிதானித்து செயல்பட்டால் இந்த நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும்.

வெள்ளி -
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வங்கிக் கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்து புதிய கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான விஷயங்கள் முடிவாகும். முகூர்த்த தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். அலுவல் விஷயமாக இழுபறியாகிக் கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வாருங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
**********************

திருவாதிரை -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.

ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். ஆரோக்கியம் மேம்படும். குழப்பமான மனநிலைகளில் இருந்து இப்போது வெளி வருவீர்கள்.

குடும்பத்தில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இப்பொழுது முடிவுக்கு வரும். சண்டைச் சச்சரவுகள் அனைத்தும் இப்போது சமாதானம் ஆகும்.
தொழில் தொடர்பாக நல்ல தகவல்களும் முன்னேற்றமும் உண்டாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், பணவரவும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பர் இன்று தொடர்பு கொள்வார். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதேபோல குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில்முறை பயணங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும்.

புதன்-
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமான லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன்-
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தொல்லை அதிகரிக்கும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி-
நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தையும் இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகளும் தொழில் வளர்ச்சியும் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்பெறுவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகளும் இன்று முழுமையாக விலகும்.


சனி-
அலுவலகப் பணிகளில், சக ஊழியர்களின் வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உறவினர்களுக்கும், மிக முக்கியமான வேண்டியவர்களுக்கும் ஒரு சில உதவிகளை செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார விஷயமாக சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும்.

ஞாயிறு-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சூரிய பகவானை வணங்குங்கள். ஆதித்யஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
***********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்