கடக ராசி அன்பர்களே!  தொழிலில் கவனம்; நண்பர்களிடம் உஷார்; கடனுதவி, வாக்குவாதம் வேண்டாம்;  செப்டம்பர் மாத பலன்கள் 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

இரக்ககுணம் நிறைந்த கடகராசி அன்பர்களே!

நீங்கள் இனிமையாகப் பேசி மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும்போது யோசித்துச் செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரத்தில் சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களைக் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும்.
பெண்கள், நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்துச் செய்வது நல்லது.
மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

பூசம்:

இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

ஆயில்யம்:

இந்த மாதம் நீண்ட தூர பயணங்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரிக்கு வேப்பிலை சார்த்தி வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் சுமுகமாக முடியும். அம்மன் வழிபாட்டால் மனக்குறை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்