திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை) 

By செய்திப்பிரிவு

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


திருவோணம் -
நன்மைகள் நடக்கும் வாரம்.

குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றி மறையும். எனவே குடும்பத்தாருடன் எந்தவித ஈகோவும் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பைத் தரும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிறிய அளவிலான பிரச்சினைகளும் பெரிதாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக தீரும்.

இதுவரை இருந்து வந்த மன ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகளில் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கமிஷன் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் வருகை ஏற்படும்.

செவ்வாய்-
உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயலாற்றி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் தேக்கநிலை என்பதே இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து அவர்களையும் மகிழ்ச்சி படுத்துவீர்கள்.

புதன்-
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதி முடிவாகும் வாய்ப்பும் உள்ளது.

வியாழன்-
அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் ஏற்படும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் இழுபறியான நிலை உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம்.

வெள்ளி-
தேவையான வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணம் தோன்றும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


சனி-
பராமரிப்பு செலவு செய்ய வேண்டியது வரும். முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் ஒத்தி வையுங்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உடலில் அசதி தோன்றும். உடல் நலம் பாதிக்கப்பட்டது போல் உணர்வீர்கள்.

ஞாயிறு-
பல நன்மைகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் பேசி இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளின் கல்வி பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************************
அவிட்டம் -

மிகப்பெரிய நன்மைகள் நடைபெறும் வாரம்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உறுதியாகும்.தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

எதிர்பாராத ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி, புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களின் உதவியால் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
நிதானம் பொறுமை மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கையாளும் பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம். வீண் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பணிச் சுமை வெகுவாக குறையும். தொலைபேசி வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் பேசி முடிக்கப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பெண்களுக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும்.

புதன்-
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். அது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை பற்றிய தகவல் கிடைக்கும்.

வியாழன்-
உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் நண்பர்களிடமும், அலுவலகத்திலும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.பயணங்கள் செய்ய வேண்டாம்.

வெள்ளி-
வங்கிக் கடன் பெறுவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இணக்கமான கருத்தொற்றுமை ஏற்படும். ஆடம்பரப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.

சனி-
பல வித நன்மைகள் நடைபெறும். உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது அல்லது உறவினர்கள் வருகை போன்றவை ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு பல் அல்லது கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

ஞாயிறு-
எதிர்காலம் கருதி சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தை விருத்தி செய்வதற்கான முதலீடுகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*****************************

சதயம் -

முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். புத்திரபாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சொத்து விற்பனை தொடர்பாக சாதகமான நிலை ஏற்படும். புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேங்கி நின்ற பொருட்கள் எல்லாம் விறுவிறுப்பாக விற்பனையாகும்.

இதுவரை தொழில் அல்லது வியாபாரம் செய்யாதவர்கள் கூட இப்போது தொழில் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு சில எதிர்பாராத நன்மைகள் நடக்கும். சகோதரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான நிலை தொடர்கிறது. கலைஞர்களுக்கு நண்பர்களின் பரிந்துரையின் பேரில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் பொறுமை மிக அவசியம். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் ஏற்படும்.

செவ்வாய்-
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஒருசில சுபச்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நிதானமான வளர்ச்சி இருக்கும்.


புதன்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக தீரும். வங்கிக்கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக உதவி கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கிடைக்கும்.

வியாழன்-
எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். வருமானம் இருமடங்காக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். வியாபாரத்தில் அமோகமான வளர்ச்சி உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வெள்ளி-
உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். சொத்துக்கள் தொடர்பாக சகோதரர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேச வேண்டும்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். முக்கியமான கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். தொழில் தொடர்பாக பயணம் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். மாமன் வகை உறவுகளிடம் உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகப்பெருமானுக்கு எருக்கம்பூ மாலை சூட்டி வணங்குங்கள். ஸ்ரீ விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் அதிகரிக்கும், தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்