‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மகம் -
தேவைகளைச் சுருக்கி சேமிப்பை அதிகப்படுத்த வேண்டிய வாரம்.
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில கவலைகள், பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழிவகைகள் கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலைகள் மறையத் தொடங்கும். எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும்.
அலுவலகத்தில் எடுத்துக் கொண்ட பணிகளை விரைவாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். ஊதியம் தொடர்பான சிக்கல்கள் ஏதும் இருந்தால் இந்த வாரம் முடிவுக்கு வரும்.
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதுவரை வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும்.
» ’’பாபாவைப் பார்த்தால் பாபாவும் உங்களைப் பார்ப்பார்!’’
» தலையெழுத்தை திருத்தி அருளும் திருப்பட்டூர் பிரம்மா; பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்
செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் வரும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் உடல் நலிவுற்றது போல் இருக்கும். சோம்பல் அதிகரிக்கும். வேலைகளில் ஆர்வமில்லாதது போல் இருக்கும்.
புதன்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய விஷேசங்கள் சுமூகமாக முடிவுக்கு வரும். பெண்களுக்கு சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.
வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிறு தூர பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சிறிய அளவிலான வியாபார முயற்சிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
சனி-
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீடு இட மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமானப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களை சந்தித்து வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி ஆதாயம் பெறுவீர்கள்.
ஞாயிறு-
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். பண உதவிகள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உங்களுடைய பொருளாதார சிக்கல்களை தீர்க்கக் கூடிய வகையில் இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
மகா சக்தி துர்கை அம்மனை வணங்குங்கள். அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.
******************************
பூரம் -
எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்தபடியே நிறைவேறும் வாரம்.
தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் அகலும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு தருவார்கள். சொந்த வீடு வாங்குவது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அது தொடர்பான உதவிகள் தானாகத் தேடி வரும். தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலைச்சல் மிகுந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இப்பொழுது ஆதாயம் இரட்டிப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக வங்கிக் கடன் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சுயதொழில் தொடர்பாக குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம்-
திங்கள் -
ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் இயல்பான நிலை இருக்கும். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. தொழில் தொடர்பாக ஏற்படும் சந்திப்புகளில் மனநிறைவு ஏற்படும்.
செவ்வாய்-
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் ஏற்படும்.
புதன்-
எதிலும் அவசரப்படக்கூடாது, நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள் விவாதங்கள் என எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
வியாழன்-
அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். வியாபார பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.
வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான விஷயம் இன்று உறுதியாகி மனமகிழ்ச்சியைத் தரும்.
சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாளாக பிரச்சினையாகிக் கொண்டிருந்த கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும். பணவரவும் நினைத்தபடியே கிடைக்கும்.
ஞாயிறு-
செலவுகள் ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவ செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானை வணங்குங்கள். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********************
உத்திரம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
குடும்பத்தாருடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாபாரத்தில் சீரான லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும். கடன் பிரச்சனைகள் நெருக்கடி தரும். தேவையான உதவிகள் கிடைத்து அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவை தரும். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலமாகவே லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
செவ்வாய்-
கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பெரிய அளவிலான பண உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
புதன்-
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான வியாபார ஒப்பந்தம் ஏற்படும். பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
வியாழன்-
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எதிலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
வெள்ளி-
வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். நெடுநாளாக சந்திக்க நினைத்திருந்த நபரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். யோகம் தொடர்பாக நல்ல தகவல் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.
சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்,எதிர்ப்புகள் அகலும். நினைத்தது நிறைவேறும்.
***********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago