மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் முடிவுக்கு வரும். சகோதர ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் அகலும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு தாமதமானாலும் சரியான நேரத்திற்கு கிடைத்துவிடும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேவையான உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். சகோதர வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

செவ்வாய் -
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் சீராக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

புதன் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.


வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் ஒரு சிலருக்கு கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். சுபகாரிய விசேஷங்கள் பற்றிய தகவல் உறுதியாகும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் தாமதமாக தம்பதிகளுக்கு இன்று புத்திர பாக்கியம் பற்றிய தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
அதிகப்படியான செலவுகள் ஏற்படக் கூடிய நாள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் ஆதாயம் எதிர்பார்க்க வேண்டாம். எனவே பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.

ஞாயிறு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யுங்கள்.
**************************


பூராடம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்த வாரம் முடிவுக்கு வரும்.
குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வார்கள். முயற்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் அனைத்தும் அகலும்.
வேலை மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய வியாபார வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சுய தொழில் தொடர்பாக குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள் -
புதிய முயற்சிகளில் ஈடுபட சிந்தனை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய் -
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் எளிதாக பேசி முடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கடி நிலைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் தகுந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


புதன் -
மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி நல்ல பேர் வாங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் முடிவுக்கு வரும்.

வியாழன் -
நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு தாறுமாறாக இருக்கும். செலவுகளைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள் விவாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பிரச்சினைகளைத் தவிர்க்கும் வழிகளில் ஈடுபடுவீர்கள்.


வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்தநாளாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும். பணவரவும் நினைத்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு -
செலவுகள் அதிகமாக ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள். அனுமன் சாலீசா கேளுங்கள். நன்மைகள் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.
****************************


உத்திராடம் -
நல்ல பலன்கள் நடைபெற கூடிய வாரம்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரக்கூடிய வாரமாக இருக்கிறது.
குடும்பத் தகராறு காரணமாக வழக்குகள் ஏதும் இருந்தால் இப்போது வாபஸ் பெறுவீர்கள். சகோதர ஒற்றுமை மேலோங்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான தீர்வு எட்டப்படும். ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாக அகலும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு நிர்ப்பந்தங்கள் விலகும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் எத்தனையோ சகோதரர்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்து தருவீர்கள். வியாபார வளர்ச்சி.சீராக இருக்கும். வியாபார நிமித்தமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியோடு ஒரு முக்கியமான பணியை செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் உறவினர்கள் வருகை ஏற்படும்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு.தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தொடர்பான தகவல் எனக்கு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான செய்தி மனநிறைவை தரக்கூடியதாக இருக்கும்.

வியாழன் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது நல்லது.

வெள்ளி -
நேற்றையப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் ஆதாயம் தருவதாக இருக்கும். இருந்தாலும் கடுமையான அலைச்சலாக இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய பகவான் வழிபாடு செய்யுங்கள். காலை நேரத்தில் ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்