மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம்.
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஆனாலும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒரு சிலருக்கு மன உளைச்சல் அல்லது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். உங்களுடைய கோபம், இயலாமை போன்றவற்றை வெளிப்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தித் தரும்.
அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும். கடன் கொடுப்பதும் கடன் வாங்குவதும் தவிர்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் முழுமையான பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்த பின்பு வாய்ப்புகளை ஏற்க வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை இன்று வைத்துக் கொள்ளக் கூடாது. தொழில் தொடர்பான சந்திப்புகளில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். பண விஷயத்தில் ஏமாறும் வாய்ப்பு உள்ளது. மனக்கட்டுப்பாடு அவசியம்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். தொழிலுக்குத் தேவையான கடன் உதவி வங்கி மூலமாகவே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
எதிர்பாராத பணவரவு உண்டாகும் நாள். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொலைபேசித் தகவல் நல்ல தகவலாக இருக்கும். மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

வெள்ளி -
நீண்ட நாளாக காத்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். அலுவலகப் பணிகளில் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உறவினர்கள் வகையில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து தருவார்கள். தொழில் தொடர்பான சந்திப்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

சனி -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

ஞாயிறு -
மன நிம்மதியும் மனநிறைவும் தரக்கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ அபிராமி அன்னையை வணங்குங்கள். அபிராமி அந்தாதியை படித்து வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தி ஆகும்.
**********************************


பூரம் -
தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.
மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும் வாரம். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
சொத்து பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். வீடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பணப்பற்றாக்குறையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்த நீங்கள் இந்த வாரம் தேவையான பண உதவிகளை கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகப் பணியில் இருந்த அச்ச உணர்வு நீங்கும்.
வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்கள் புதிய கல்வி முறை அல்லது புதிய பயிற்சி முறைகளை கற்பதற்கு தேவையான வசதிகளை செய்து தருவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களால் வியாபாரம் அல்லது தொழில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும். பணிபுரியும் இடத்திலும், அக்கம்பக்கத்தினருடனும் தேவையற்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக அரசு வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்திற்க்கும் இன்று முற்றுப்புள்ளி ஏற்படும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை பார்க்க வேண்டியது வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடன் தொடர்பான சில தர்ம சங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கையாண்டால் வெற்றியைக் காண முடியும்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டு. மனைவி வழி உறவினர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டியது வரலாம்.

ஞாயிறு -
வீட்டிலேயே குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். நண்பர்களோடு வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது இரண்டுமே இன்று செய்யக்கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். வாராஹி மூல மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டே இருங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
************************************


உத்திரம் -
இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும்.
ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். வாகனங்களால் அதிக செலவுகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி வாகனச் செலவு என்பதே இருக்காது. தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்டு இருந்த சங்கடங்கள் தீரும்.
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் மத்தியில் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்காலம் பற்றிய கவலை தீரும் அளவுக்கு நன்மைகள் நடைபெறும் வாரமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலமாக தொழில் ரீதியான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். சரியாக திட்டம் தீட்டி முக்கியமான பணிகளை செய்து முடித்து மனதிருப்தி அடைவீர்கள்.

புதன் -
ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும். எந்த வேலையைச் செய்தாலும் முழு கவனத்தோடு செய்தால் எந்த பிரச்சினையும் வராது.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்துக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுங்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும், பெரிய பாதிப்பு ஏற்படாது.

சனி -
எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பொருளாதார தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். எனவே செலவுகளில் சிக்கனம் தேவை. அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குங்கள். ஆடம்பர விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வணங்குங்கள். ஐயப்பனுக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்