ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -
சிறப்பான நன்மைகள் நடைபெறக்கூடிய வாரம்.
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் உங்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்வார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும்.
தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

எளிதான முயற்சியிலேயே முழுமையான வெற்றிகளைக் காணக்கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பு மடங்காக இருக்கும். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். இதுவரை இருந்த அரசு வழி நெருக்கடிகள் இன்று முடிவுக்கு வரும். சுபகாரிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சோம்பல் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பு குறையும். ஒருவித மந்த நிலை இருந்து கொண்டே இருக்கும். பயணங்கள் செய்ய வேண்டாம். அவசரமாக முடிவுகளை எடுக்கக் கூடாது.

புதன் -
சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். வருமானம் பல மடங்கு இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பாக பணவரவு உண்டாகும்.

வியாழன் -
இயல்பான நாளாக இருக்கும். வருமானம் குறைவாக இருக்கும். அதேசமயம் பெரிய பாதிப்புகளும் இருக்காது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் அல்லது சக ஊழியரின் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
திருப்திகரமான நாளாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான முன்னேற்றமும், எதிர்பார்த்த வருமானமும் இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில முன்னேற்பாடுகளை செய்வீர்கள். குழந்தை பாக்கியம் பற்றிய தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிர்பார்த்த செலவுகளும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். தனவரவு மந்த நிலையில் இருக்கும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கையாளும் பொருட்களில் அதிக கவனம் வேண்டும்.

ஞாயிறு -
நெருங்கிய நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணி நிமித்தமான சிறு தூரப் பயணம் ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகா விஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். அதிக நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
*********************


மிருகசீரிடம் -
சிறப்பான வாய்ப்புகள் வீடு தேடி வரும் வாரம்.
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள், பிரச்சினைகள் ஒவ்வொன்றாக விலகும் புதிய முயற்சிகளில் ஈடுபட வழிவகை கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும் அலுவலகப் பணிகளில் இடமாற்றம், வேலை மாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது தொழிலில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகலும்.
குறிப்பாக அரசு பணியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். இதுவரை நெருக்கடி தந்து கொண்டிருந்த உறவினர்கள் மனம் மாறுவார்கள். பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நல்ல செய்திகள் கிடைக்கும் நாள். மனநிறைவு தரும்படியான சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாள்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முழு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தேடி வரும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலமாக தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
எந்த வேலைகள் செய்தாலும் அதில் குற்றம் குறைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒருசில நெருக்கடியான நிலைகள் ஏற்படும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வியாழன் -
ஆதாயம் தரக்கூடிய விஷயங்களாகவே இன்று நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொத்துக்கள் பிரச்சினை சுமுகமாக முடியும். வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி -
ஆதாயம் ஏற்படக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் நன்மைகள் நடக்கும். இளைய சகோதரர் தேவையான உதவிகளை செய்து தருவார். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் எதிர்பார்த்தபடி சுமுகமாக முடிவாகும்.

சனி -
மகிழ்ச்சிகரமான நாள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டிய நாள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எந்த பிரச்சினைகளிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும். எதிர்ப்புகள் விலகும்.
****************************


திருவாதிரை -
நெருக்கடிகள் விலகி நன்மைகள் நடைபெறக்கூடிய வாரம்.
மன உளைச்சல் தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்ப பிரச்சினைகள் தீரும்.
இதுவரை பொருளாதாரச் சிக்கல்களில் சிக்கித் தவித்தவர்களுக்கு பொருளாதார மேம்பாடு ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வருவதால் மனநிம்மதி ஏற்படும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உடன்பாடு செய்துகொள்வார்கள்.
பணிகளில் இதுவரை இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மாறும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழிலுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். அரசு உதவிகள் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதுவரை நஷ்டத்தில் இருந்தவர்கள் லாபத்தைக் காண்பார்கள். பெண்களுக்கு மனக் குழப்பங்கள் தீரும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நண்பர்களால் அதிக அளவில் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நீடிக்கும். வியாபார ரீதியிலான பயணத்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக்கூடிய நாள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் மனநிறைவு தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் முற்றிலுமாக அகலும்.

புதன் -
நிதானமாகச் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்ள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். பொருளிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கோபப்படுவதை முற்றிலுமாக தவிருங்கள்.

வியாழன் -
தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இன்று முழுமையாக நடைபெறக்கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நினைத்ததை நினைத்தபடியே செய்து காட்டக் கூடிய நாளாக இருக்கும்.

வெள்ளி -
செலவுகள் ஏற்பட்டாலும் அதற்குத் தகுந்த வருமானம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும், முக்கியமான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழிலுக்குத் தேவையான ஒரு சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் செலவுகள் ஏற்படக் கூடிய நாள்.

சனி -
நன்மைகள் அதிகமாக நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களால் பொருளாதார பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். முக்கிய நபர்களை சந்திப்பதால் நல்ல திருப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநடராஜப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். நல்ல பலன்கள் அதிகமாகும். நெருக்கடி தந்த பிரச்சினைகள் அகலும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்