விசாகம், அனுஷம், கேட்டை ;  வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல் 14 வரை)   

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


விசாகம் -
மிக அதிகமான முயற்சிகளாலும் அதிகப்படியான உழைப்பாலும் வெற்றிகளை பெறுகின்ற வாரமாக இருக்கும்.
எதிர்பாராத தடைகள் அடிக்கடி வரும். அந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
பதட்டத்தை குறைத்துக் கொண்டு சிந்தனையை அதிகப்படுத்திக் கொண்டால் எளிதாக இந்த வாரத்தை கடக்க முடியும். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அனைத்தையும் சரிப்படுத்த முடியும்.
அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் படிப்படியாக விலகும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கடும் பிரச்சினைக்குப் பின் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். பெண்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும்.

வியாழன் -
நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் உதவிகளை எதிர்பார்த்து இருப்பார்கள். நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து தருவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபார வழிவகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும். தேவையான உதவிகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

சனி -
அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குருபகவானை வழிபாடு செய்யுங்கள். குரு கவசம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக்குழப்பம் தீரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
***********************************


அனுஷம் -
தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும். அதேசமயம் குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றும்.
நிதானத்தோடு இருந்தால் அந்த பிரச்சினைகளை எளிதில் கடக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். அலுவலகப் பணிகளில் ஒவ்வொரு வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியது வரும். அதிகப்படியான திருத்தங்கள் செய்ய வேண்டியது இருக்கும்.
அதிக கவனத்தோடு செயல்பட்டால் இந்த பிரச்சினைகளை எளிதில் கடந்து செல்ல முடியும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும்.
குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும் புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஒரு சில விஷயங்களை முன்னெடுத்துச் செய்வீர்கள்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
அலுவலகப் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

சனி -
மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். ஸ்ரீ அபிராமி அன்னையை மனதில் நினைத்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*****************************


கேட்டை -
அதிக நன்மைகள் ஏற்படும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும்.
குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். இளைய சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். லாபம் வேகமெடுக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைஞர்கள் பொறுமை காக்க வேண்டிய வாரம்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் இருப்பது நல்லது.

செவ்வாய் -

எதிர்பாராத அளவுக்கு அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சைப் பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வார்த்தைப் போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். நெருக்கமான நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகை ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். மிளகு சாதம் தானம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்