’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
திருவோணம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நகை தொடர்பான கடன் பிரச்சினைகள் தீரும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
» வீட்டு திருஷ்டி கழியும்; தடைகள் உடையும் - ஆகாச கருடன் கிழங்கின் அற்புதம்
» மீன் தொட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி, ஆகாசக் கிழங்கு... கண் திருஷ்டியைக் கழிக்க எளிய பரிகாரங்கள்!
செவ்வாய் -
எதிர்பாராத நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கியில் தொழில் தொடர்பான கடன் உதவி கிடைக்கும். கமிஷன் தொடர்பான வியாபார விஷயங்கள் சுமுகமாக இருக்கும்.
புதன் -
எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாழன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
வெள்ளி -
பொறுமையும் நிதானமும் அவசியம். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. சக ஊழியர்களிடம் இணக்கமாக இருக்கவேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்யவேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் பிரச்சினைகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது.
சனி-
செயல்களில் தீவிரம் காட்டி வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். இல்லத்தில் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஞாயிறு -
எதிர்பாராத அளவுக்கு நன்மைகள் நடைபெறும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும், எதிர்ப்புகள் விலகும், நினைத்தது நிறைவேறும்.
***********************************
அவிட்டம் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள்.தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு மனம் மகிழும்படியாக நல்ல விஷயங்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குழந்தையில்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
தேவையான பண உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
செவ்வாய் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அலட்சியமாக எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். சக ஊழியர்கள், சக நண்பர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம்.
புதன் -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று வந்துசேரும்.
வியாழன் -
அதிக நன்மைகள் நடக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரங்களில் லாபம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும்.
வெள்ளி -
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கையாள திட்டம் தீட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கிய நபர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான சிந்தனை உருவாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
சனி-
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் இருமடங்காக இருக்கும். வியாபார வளர்ச்சி அபாரமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தைத் தரும்.
ஞாயிறு -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்டநாளாக வராமலிருந்த பணம் இன்று திரும்பக் கிடைக்கும். இளைய சகோதரரால் நன்மைகள் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
************************************
சதயம்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் தானாக தேடி வரும். வியாபாரம் நல்ல வளர்ச்சியில் இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பெண்களுக்கு இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் இன்று எளிதாக முடியும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தொழில் தொடர்பாக புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும்.
செவ்வாய்-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அநாவசியச் செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.
புதன்-
தேவைகள் பூர்த்தியாகும். கடந்த சில நாட்களாக இருந்த இறுக்கமான மனநிலை மாறும். உத்தியோகத்தில் சகஜ நிலை திரும்பும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உதவிகள் அனைத்தும் இன்று கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
வியாழன் -
தொழில் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி -
செய்கின்ற வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். மனதில் தேவையற்ற அச்ச உணர்வு தோன்றும். ஆனாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
சனி-
புதிய முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறு தூர பயணங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் உதவியால் முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
ஞாயிறு -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் மன நிறைவைத் தரும். எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
***********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago