’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்தம் -
குறைகளை நிறைகளாக மாற்றி வெற்றி பெறும் வாரம்.
குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குழப்பமான நிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தானாக தேடி வரும். தொழிலகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
விலகிச் சென்ற கூட்டாளிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். பெரிய மனிதர் ஒருவர் உதவி செய்வார்.
இந்த வாரம் -
திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயம் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
» பாபாவுக்கு பிரார்த்தனைச் சீட்டு; கண்ணீர் துடைக்க ஓடி வருவார் சாயிபாபா!
» ’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன்! தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா!
செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் கலந்தாலோசிக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
புதன்-
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள் திருமணம் தொடர்பாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சிம் வேண்டாம்.
வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகள் மனநிறைவைத் தரும்படியாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கமிஷன் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். தொலைதூர உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் வருமானம் ஏற்படும்.
ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்டநாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். அல்லது கேளுங்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும். நன்மைகள் அதிகமாகும்.
********************************
சித்திரை -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.பணவரவு தாராளமாக இருக்கும்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் முடிவுக்கு வரும். தந்தை மகன் உறவில் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் முடிவுக்கு வரும்.
தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துப் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதால்ல் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள்.அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். இறைவழிபாடு மன அமைதி தரும்.
வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்டநாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ஞாயிறு -
நண்பர்களுடன் பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம்-
சுவாமி ஐயப்பனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
**********************************
சுவாதி -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பப் பிரச்சினைகள், சொத்துப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். தாய்மாமன் வகை உறவுகளால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தார் தேடி வந்து உதவி செய்வார்கள்.
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் காரணமாக பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். பெண்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.
தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்கெனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடரும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இன்று முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதி முடிவாகும் வாய்ப்பு உள்ளது.
வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாகப் பேசுங்கள்.
சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பரை தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய மனக்கவலை தீரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago