’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம் . எடுத்துக்கொண்ட வேலைகளில் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
தாய்வழி உறவுகளிடம் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் மறையும். மாமனார் வழியில் பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய சகோதரரிடம் ஏற்பட்ட மனக் கசப்புகள் அகலும்.
சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில் தொடங்கும் முடிவுகள் இருந்தால் இந்த வாரமே தொழிலைத் தொடங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன, சரியாக பயன்படுத்தினால் நிச்சயமாக வெற்றி உண்டாகும்.
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். படிப்படியாக வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
.
» பாபாவுக்கு பிரார்த்தனைச் சீட்டு; கண்ணீர் துடைக்க ஓடி வருவார் சாயிபாபா!
» ’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன்! தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா!
செவ்வாய் -
எதிர்பார்த்த கடன் உள்ளிட்ட உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக முக்கிய உதவிகள் கிடைக்கும். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
புதன் -
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்களால் எரிச்சலுக்கு ஆளாக்கப்படுவீர்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.
வியாழன் -
எதிர்பார்த்த நன்மைகள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபகரமாக முடியும். உறவினர்கள் வருகை அல்லது உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் முதலானவை நடக்கும்.
வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள்.
சனி-
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.
ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்
**********************************.
பரணி -
அதிக நன்மைகள் ஏற்படக்கூடிய வாரம்.
நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். திருமண வயதில் இருக்கும் ஆண் - பெண் இருபாலருக்கும் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதிகள் முடிவாகும் வாய்ப்பு உள்ளது.
உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.
செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை செய்ய வேண்டியது வரும். கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நெருக்கடிகள் ஏற்படும்.
புதன் -
குடும்பத்தில் பிள்ளைகள் தொடர்பாக பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன்-
முயற்சிகளில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நகர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
சனி-
அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.
ஞாயிறு -
படபடப்பாக இருக்கவேண்டாம். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானம் தேவை. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். ஸ்ரீவாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக் குறைகள் நீங்கும்.நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
********************************
கார்த்திகை -
செயல்களில் தீவிரம் காட்டி வெற்றி பெற வேண்டிய வாரம்.
முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் வாய்ப்பு கிடைக்கும், தவற விடவேண்டாம்.
அலுவலகத்தில் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு மற்றவர்கள் வியப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். தேவையான உதவிகள் தேடி வரும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தொடர்பான சுப விசேஷங்கள் முடிவாகும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இரண்டாவது குழந்தை பாக்கியம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வகையில் ஆதாயம் ஏற்படும். அதிலும் தாய்வழி உறவினர்களால் பெரிய அளவில் ஆதாயம் உண்டாகும்.
செவ்வாய்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும்.தேவையற்ற செலவுகள் ஏற்படும்.மற்றவர்களால் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் ஆளாவீர்கள். எனவே அமைதியாக இருப்பது நல்லது.
புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.
வியாழன் -
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நெருக்கடி தந்துகொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.
சனி-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்றாகப் படித்துப் பார்க்க வேண்டும்.
ஞாயிறு -
இதுவரை வராமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொத்துப் பிரச்சினையில் சகோதரர்கள் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து வணங்குங்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.
************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago