’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மகம் -
எடுத்துக் கொண்ட முயற்சிகளில் எப்படியும் வெற்றி கிடைத்து விடும் எனவே கவலைப்படவேண்டாம். மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.
வாழ்க்கைத் துணையின் உதவியுடன் பல சாதனைகளைச் செய்வீர்கள். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சொத்துகளாகவும் பணமாகவும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குழுவாக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது. அந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவீர்கள்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபாரக் கிளைகளை தொடங்குவார்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றமும் உதவிகளும் கிடைக்கும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும். செய்யும் தொழிலில் புதுமைகளைப் புகுத்தி வெற்றி காண்பீர்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். விழிப்புடன் இருந்து வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வாரம் -
திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தங்கள் போடுவீர்கள். ஒரு சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.
» புனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை)
» ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை)
செவ்வாய்-
எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும். வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும்.
புதன்-
பரபரப்பாக இருப்பீர்கள். வேலைகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் இன்று முடித்து திருப்தி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக நண்பர்களின் உதவியோடு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடும் மன உளைச்சலில் ஏற்படுத்திக் கொண்டிருந்த முக்கிய பிரச்சினைக்கு இன்று முடிவு கிடைக்கும்.
வெள்ளி-
நிதானம் தேவை. பொறுமையாக எந்த விஷயத்தையும் கையாள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்களில் ஒருசிலருக்கு அத்தியாவசிய உதவிகளை செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக சில உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
ஞாயிறு -
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் முடிவாகும். திருமணமாகாத இளைய சகோதர சகோதரிகளுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமண தேதிகள் முடிவாகும் வாய்ப்பு உள்ளது. வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில நபர்களை சந்தித்து திட்டங்களை தீட்டுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஹனுமன் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.எதிர்ப்புகள் காணாமல் போகும். நன்மைகள் அதிகமாகும்.
****************************
பூரம் -
எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றங்கள் எதிர்பாராத வகையில் இருக்கும். சேமிப்பு பல மடங்காக உயரும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான தம்பதியருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் தொடர்பாக ஏற்பட்ட மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் தொடர்பான விஷயங்கள் இன்று சுமுகமாக முடிவுக்கு வரும்.
செவ்வாய் -
எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் வரும்.
வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த சிறிய அளவிலான சச்சரவுகள் நீங்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ஞாயிறு -
பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
சக்தி வடிவான அம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*********************
உத்திரம் -
எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.
சகோதர வழியில் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கும். அவர்களுடைய கல்வி உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். அலுவலக வேலைகளில் இயல்பான நிலையில் இருக்கும்.
சக ஊழியர்களுடன் ஒருவருக்கொருவர் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.
செவ்வாய் -
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக ஆர்வம் ஏற்படும். சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
புதன் -
எதிர்பாராத பண வரவு உண்டாகும்.தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சிறிய கடன்களில் ஒருசிலவற்றை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.
வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக, அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.
வெள்ளி -
உங்கள் பணிகளை மட்டும் இன்று கவனித்து வாருங்கள். பணி செய்யும் இடத்தில் மற்றவர்கள் வேலைகளில் தலையிடாதீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழியுங்கள். அவர்களிடமும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பை தராத வகையில் இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். சிறு தூரப் பயணம் மேற்கொண்டு அதில் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவிநாயக பெருமானுக்கு அர்ச்சனை செய்து அருகம்புல் மாலை சூட்டி வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago