புனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை) 

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம் -
வருமானம் பல மடங்காக இருக்கும்.
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகள் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினையில் சகோதரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை செய்வது நல்லது. இல்லை என்றால் சில நாட்கள் தள்ளிப் போடுவதும் நல்லது.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாகும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது இப்போது வேண்டாம். முடிந்தவரை இருக்கின்ற முதலிலேயே வியாபாரத்தை செய்யுங்கள்.
பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மூன்றாவது மனிதரால் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்துக்குள் அனுமதிக்க வேண்டாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக ஏற்படும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சேவை தரும் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு, வியாபார வளர்ச்சிக்காக மேலும் சில ஆட்களை பணிக்கு அமர்த்த திட்டமிடுவீர்கள்.

புதன் -
குடும்பத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகும். சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவதாக சமாதானமாக இறங்கி வருவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும். அரசு உதவிகள், வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும். முடிந்தால் ஒப்பந்தங்கள் போடுவதை தள்ளி வையுங்கள். எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கு தேவை.

வெள்ளி -
தாய்வழி உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கக்கூடிய நாள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுடைய பணிகளை பகிர்ந்து கொள்வார்கள். தொழில் செய்யும் இடத்திலும், வியாபார இடத்திலும் ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சொத்துக்களை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது.


சனி-
சங்கடங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். அது அலுவலக வேலையாகவும் இருக்கலாம் அல்லது வீடு தொடர்பான வேலையாகவும் இருக்கலாம். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள். குறிப்பாக பசுமாடு, குரங்குகள், தெரு நாய்கள், பூனைகள் இவற்றிற்கு உணவு தருவது சிறப்பான பலன்களைத் தரும். நன்மைகள் அதிகமாகும். செலவுகள் குறையும்.
****************************


பூசம் -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.
கடந்த சில வாரங்களாக இருந்த குடும்பப் பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் அனைத்தும் தீரும். சகோதரர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் முற்றிலுமாக அகன்று, மீண்டும் சகோதர ஒற்றுமை ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவரவு மட்டுமல்லாமல் புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் அகலும். சுயதொழில் தொடங்குவதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் தீரும்.
கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
செயல்களால் சாதித்துக் காட்ட வேண்டிய நாள். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரு மடங்கு ஏற்படும். தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். இன்று வங்கிக் கடன் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் முழு வெற்றியைப் பெறலாம்.

புதன்-
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய வியாபாரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். வீன் சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். வருமானம் பெருகும்.
************************


ஆயில்யம் -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக தீரும். சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் தீரும். சொத்து சம்பந்தமாக வழக்குகள் ஏதும் போட்டிருந்தால் இப்போது அதை வாபஸ் வாங்கும் நிலை உருவாகும். இளைய சகோதரருக்கு விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.
வருமானம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

வியாழன்-
நல்ல சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும்.



வெள்ளி-

குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறும். எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள் அல்லது புதிதாக மாற்றி வாங்குவீர்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்