மூலம், பூராடம், உத்திராடம் ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! (மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை)
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மூலம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் மாறும். நண்பர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள்.
வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். இழந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து ஏற்பாடுகள் அகலும். மன ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள்.
இந்த வாரம் -
திங்கள்-
எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகும். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.
புதன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
வியாழன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டு உபயோகப் பொருட்களில் திடீர் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காததால் வருத்தம் ஏற்படும். மனம் தாறுமாறாக சிந்திக்கும்.
வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும்.
சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்தினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணத்தை கடுமை காட்டி வசூலிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
ராமாயண காவியத்தில் சுந்தரகாண்டம் பகுதியை படியுங்கள். அதில் அனுமனின் சிறப்புகள் பற்றி படியுங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
*********************************************
பூராடம்-
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.
பணியில் அதிக அழுத்தங்கள் ஏற்படும். வேலை நிலைக்குமா பறிபோகுமா என்ற பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். நம்பிக்கையோடு இருங்கள். வேலையில் பாதிப்பு வராது.. வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.
புதன்-
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகி இருப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.
வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி-
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்த செயலிலும் அதிக கவனம் வேண்டும்.
சனி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
ஞாயிறு-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். கருத்துக்களை பகிரும் பொழுது அதன் உண்மைத் தன்மையை அறிந்து பகிர வேண்டும்.
வணங்கவேண்டிய தெய்வம்-
திருப்பட்டூர் பிரம்மா ஸ்தல வரலாறு படியுங்கள். பிரம்ம முகூர்த்தத்தில் சிவபெருமானை நினைத்து வணங்குங்கள். நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
********************************************
உத்திராடம்-
நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.
இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.
செவ்வாய்-
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.
புதன்-
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாழன்-
குழந்தைகளின் கல்வியால் பெருமைப்படுவீர்கள். மனதளவில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று செயல்படுத்திப் பார்க்க முயற்சி செய்வீர்கள்
வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
சனி-
தொழில் தொடர்பான ஒரு நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவ செலவுகள் வெகுவாக குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஞாயிறு-
குடும்ப உறவுகள் பலப்படும். மனதிலிருந்த அச்ச உணர்வில் இருந்து விடுபட நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக செயல்கள் நடைபெறும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராகி மூல மந்திரத்தை தினம் 24 முறை உச்சரியுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடந்தே தீரும்.
*****************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago