விசாகம் அனுஷம், கேட்டை; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - வார நட்சத்திர பலன்கள்- - (மார்ச் 23 முதல் 29 வரை)
- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விசாகம்-
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம்.
அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.
பெண்களுக்கு திருமணம் போன்ற விஷயங்கள் முடிவாகும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அரசு உத்தியோகம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அது தொடர்பான தேர்வுகள் எழுதி இருந்தால் சாதகமான பதில் கிடைக்கப் பெறுவீர்கள்.
சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள், தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்காலம் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்பத்தினரின் நலன் கருதி ஒரு சில முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அலுவலகத்தில் வேலை தொடர்பான இட மாற்றம் வேண்டி விண்ணப்பம் செய்யும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய்-
பணவரவு எதிர்பார்த்த படியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் சாதகமாகவும், லாபகரமாகவும் இருக்கும்.
புதன் -
எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளவேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். காசோலைகள் கொடுப்பதில் அதிக கவனம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டும்.
வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
சனி-
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.தொழில் தொடர்பான உதவிகள் கிடைத்து பணவரவு சரளமாக இருக்கும். உறவினர்கள் வருகை அல்லது உறவினர்கள் இல்லங்களுக்கு நீங்கள் செல்வது போன்ற விஷயங்கள் நடக்கும்.
ஞாயிறு -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பது நல்லது. முக்கியமான சந்திப்புகள், வியாபார சந்திப்புகள் தள்ளி வையுங்கள். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும், தடைகள் அகலும்.
***************************************************************
அனுஷம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திரைப்பட கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனை தோன்றும். அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
செவ்வாய் -
நிதானமாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண வேண்டும். தேவையில்லாத சிக்கல்களில் நீங்களாக போய் மாட்டிக்கொள்ள வேண்டாம். பிரச்சினைகளில் இருந்து விலகியே இருங்கள். பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. குடும்பத்தினருடன் இயல்பாக இருங்கள்.
புதன் -
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்க வேண்டியது இருக்கும். வீடு மற்றும் தொழில் தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வியாழன் -
முக்கியமான கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
வெள்ளி-
நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சந்திப்புகள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படும்.
ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் முக்கியமான கடனை அடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அடகுப் பொருட்களை மீட்கவும் வழி கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி பகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***********************************************************
கேட்டை -
முனைப்போடு செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில் தொடர்பான சந்திப்புகளில் விட்டுக் கொடுத்து சென்றால் சாதகமாக இருக்கும். சொத்துப் பிரச்சினைகளில் வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.
செவ்வாய் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும், புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
புதன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். வாகன பழுது, வீட்டு பராமரிப்புச் செலவுகள் என செலவுகள் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் வேலைகளை நீங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
வியாழன்-
பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும்.
வெள்ளி -
அலுவலகத்தில் உங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளை தள்ளிப்போடுவது நல்லது. பயணங்களை ஒத்தி வையுங்கள். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தவணை வாங்கி கொள்வது நல்லது. சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.
சனி-
வருமானம் இருமடங்காகும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இருந்த மனக்கசப்புகள் நீங்கி மன ஒற்றுமை ஏற்படும்.
ஞாயிறு-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். மன நிம்மதி அடையும் நாள்.
வணங்கவேண்டிய தெய்வம் -
காவல் தெய்வங்களாக இருக்கும் ஐயனார் முனீஸ்வரன் போன்ற எல்லை தெய்வங்களை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*****************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago