அஸ்தம், சித்திரை, சுவாதி; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை) 

By செய்திப்பிரிவு

அஸ்தம், சித்திரை, சுவாதி; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.
ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் தோன்றும். எனவே மருத்துவ செலவுகளும் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இந்த பணிகளுக்கு வேலைக்கான வாய்ப்புகள் உண்டு.
மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு கல்விக்காக இப்போதே தங்களை தயார் செய்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முழு அளவில் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவீர்கள் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். வீடு தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொந்த வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும் தொழில் தொடர்பான சந்திப்புகள் தள்ளிபோகும். பயணங்களால் பெரிய அளவில் சாதகம் ஏதும் இருக்காது.

புதன் -
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வியாழன்-
தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து கூற வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி குறை கூறி பேச வேண்டாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி-
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சனி-
அலுவலகத்தில் உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை பற்றிய தகவல் கிடைக்கும். இடம் மாற்றம் பற்றிய தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார சந்திப்புகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினார் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஞாயிறு-
வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நடக்கும்.
******************************************************

சித்திரை -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
பயணங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும். தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றும்.

இந்த வாரம் -

திங்கள் -
சாலைகளில் கவனமாக செல்லுங்கள். பணத்தை கையாளும் போது அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் பிரச்சினைகளில் கருத்துக்கள் எதுவும் கூற வேண்டாம். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம்.

செவ்வாய் -
அலுவலக வேலைகள் அனைத்தும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு தேவையான உதவிகளை உங்கள் உயரதிகாரி செய்து கொடுப்பார். வங்கிக்கடன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சிக்கு சாதகமான தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன் -
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். கூடுதல் நேரம் இருந்து அலுவலக வேலைகளை பார்க்க வேண்டிய நிலை வரும். குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவு செய்ய வேண்டியது வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். ஒரு சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வெள்ளி-
தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர் பார்த்து இருந்த கடன் உதவி கிடைக்கும். பழைய கடனில் ஒரு சிலவற்றை அடைத்து மீண்டும் புதிய கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்களும் மனநிறைவைத் தரும்படியாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சனி-
அலுவலக வேலைகளில் செய்த வேலைகளில் மீண்டும் திருத்தங்கள் செய்ய வேண்டியது வரும். மன உளைச்சல் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி கவலை தோன்றும். ஆரோக்கியத்தில் தேவையில்லாத அச்சம் ஏற்படும். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

ஞாயிறு-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள், நெய்தீபம் ஏற்றுங்கள், நன்மைகள் அதிகமாகும், பிரச்சினைகள் தீரும்.
*********************************************

சுவாதி -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் திருமணம் முயற்சிக்காக கவலையில் இருந்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பான தேவையான உதவிகளை குடும்பத்தில் சுபகாரியம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து, செயல்படுத்த தொடங்குவீர்கள்.

புதன்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் பெருகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும் தேவையான உதவிகள் தொழிலுக்கு கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். நண்பரின் வேலைக்காக பரிந்துரை செய்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி-
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.

சனி
அலைச்சல் அதிகமாக ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கேட்டு தொல்லை தருவார்கள். சிறிய அளவிலான கடன் பிரச்சனை ஒன்று தொல்லை தருவதாக இருக்கும்.


ஞாயிறு -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். சகோதரர்களுடன் ஒற்றுமை ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்க்கப்படும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டி வணங்குங்கள். ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்