ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)
- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
உங்கள் முயற்சிகளுக்கு அனைவரது ஆதரவும் கிடைக்கும்.
கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகமாகும். சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், வீண் பிரச்சினைகள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நிறுவனங்களோடு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் போடும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் வங்கிக் கடனில் கூடுதலாக கடன் பெறவும் வாய்ப்பு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
செவ்வாய்-
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபார இடங்களில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
புதன்-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஒப்பந்தமாகும். வாழ்க்கைத் துணையால் உறவினர்களிடம் வாங்கிய கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் முன்னேற்ற பாதைக்கு செல்லும். மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சம் விலகும்.
வியாழன்-
பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும். எந்த பிரச்சினை வந்தாலும் அமைதியாக கடந்து செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் எரிச்சலை காட்டாதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வெள்ளி-
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்புகள் செய்யும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை இல்லாத பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வரவேண்டிய பணம் கிடைக்கும்.
சனி-
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். குடும்பத்தினருக்கு ஆடை ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.
ஞாயிறு-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகன பழுது, வீட்டு பராமரிப்புச் செலவுகள் என செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்கள் கடன் கேட்டு தொல்லை தருவார்கள். தேவையில்லாத வாக்கு வாதங்கள், மன வருத்தங்கள் ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருப்பதும், குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவதும் நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம்-
நவக்கிரகத்தில் இருக்கும் சந்திர பகவானை வணங்குங்கள். சௌந்தரிய லஹரி பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். பிரச்சினைகளும் குழப்பங்களும் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
************************************************************************
மிருகசீரிடம் -
முயற்சிகளால் வெற்றி காண வேண்டிய வாரம்.
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அவசரமான முடிவுகளை எடுக்க கூடாது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல நட்புறவு ஏற்படும். குடும்பத்தினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்ப்பீர்கள்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும், பணவரவு மனநிறைவைத் தரும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான கடன் பிரச்சினைகள் தீரும், அடகு நகை மீட்க வாய்ப்பும் உள்ளது. மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகமாகும்.
இந்த வாரம் -
திங்கள்-
மனக்கவலைகள் அதிகமாகும். தேவையில்லாத சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அலுவலகப் பணியில் கூடுதல் சுமை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி தள்ளிப்போகும்.
செவ்வாய்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மன வேற்றுமைகள் அகலும்.
புதன்-
எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். பணச்செலவு அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.
வியாழன்-
கடந்த சில தினங்களாக இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீர்வதற்கான வழி வகை கிடைக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
வெள்ளி-
நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய பணம் வந்துசேரும்.
சனி-
வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு மாறும் எண்ணம் ஏற்படும். அதேபோல வாகனம் மாற்றும் சிந்தனையும் தோன்றும்.
ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் நிறம்மாறும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் ஒப்பந்தங்கள் ஏற்பட்டு கையெழுத்தாகும். பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்குங்கள். பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வணங்குங்கள். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
**********************************************************
திருவாதிரை-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தாமதமானாலும் அதேபோல போராட்டங்களாக இருந்தாலும் முடிவில் வெற்றி காண்பீர்கள்.
ஆனாலும் ஒரு சில மனக் குழப்பங்கள் ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பமான சிந்தனை ஏற்படும். மறைமுக எதிரிகள் தொல்லை அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். அரசு வழி உதவிகளும் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்தவேண்டும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் அரசு அதிகாரிகளால் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும்.
செவ்வாய்-
அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியை செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் இழுபறியாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தினருடனும் நண்பர்களுடனும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
புதன்-
தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.வேலை தொடர்பாக வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில பிரச்சினைகள் கவலை தருவதாக இருந்தாலும், எதிர்கொள்ளும் பக்குவம் ஏற்படும்.
வியாழன்-
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கையாள வேண்டும். மின்சாதன பொருட்களை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பாக தள்ளிப்போன சந்திப்பு இன்று நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொல்லை தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.
சனி-
அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். விரக்தியான மனநிலை தோன்றும். தேவையற்ற சர்ச்சைகளுக்கு நீங்களே காரணமாக இருக்க வேண்டாம்.எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக கையாள வேண்டும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த தொழில் உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். காகத்திற்கு உணவளியுங்கள். பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago