அஸ்வினி, பரணி, கார்த்திகை; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை) 

By செய்திப்பிரிவு

அஸ்வினி, பரணி, கார்த்திகை; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி-

கடந்த சில நாட்களாக இருந்த மன அழுத்தங்கள், நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி மனம் தெளிவாகும் வாரம்.
செயல்களில் புதிய வேகம் உண்டாகும். மனதில் வைராக்கியம் பெருகும். பணியிடத்தில் உங்களை மட்டம் தட்டியவர்கள் எல்லாம் உங்களைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் விரைந்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஏற்பட்ட அனைத்துவித குழப்பங்களும் முடிவுக்கு வரும். ஒருவருக்கொருவர் தத்தமது தவறுகளை உணர்ந்து திருந்துவார்கள். சுபச்செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய அச்சம் நீங்கும். பெண்களுக்கு இதுவரை தாமதப்பட்ட திருமண முயற்சிகள், வேலை தேடும் முயற்சிகள் அனைத்தும் இனி சுகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
நிதானாமாக செயல்பட வேண்டும். வழக்கமான வேகம் வேண்டாம். பண விஷயத்தில் சிக்கனமாக இருக்க வேண்டும். தேவையற்ற விவாதம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் கவனம் வேண்டும். யாரிடமும் உங்கள் பிரச்சினைகளை கூற வேண்டாம்.


செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கலாம்.

புதன்-
அலுவலகத்தில் உங்கள் மீதான களங்கம் துடைக்கப்படும். வரவேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மருத்துவ செலவு முற்றிலும் தீரும். தொலைபேசி தகவல் உற்சாகம் தரும்.

வியாழன்-
உங்களின் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்வீர்கள். சொந்தமாக தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை தீவிரமாகும். சொந்த வீடு வாங்குவது பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி-
பதவி மாற்றம் ஏற்படும். வேறு வேலை தேடும் முயற்சி சாதகமாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்.

சனி-
குடும்பத்தேவைகள் நிறைவேறும். பயணங்கள் வேண்டாம். கையாளும் பொருட்களில் கவனமாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வீண் வாக்குவாதம் வேண்டாம்.

ஞாயிறு-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் நன்மை தரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள் ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். மனக்குழப்பம் தீரும். நல்லது நடக்கும்.
******************************************************************

பரணி -
நன்மைகள் நடக்கும் வாரம். அலுவலக நெருக்கடிகள் நீங்கும்.
சக ஊழியர்களின் விரோத மனப்பான்மை மாறும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய நிலுவைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். குழந்தைகளின் ஆரோக்கியம் சீராகும். சகோதர சண்டைகள் முடிவுக்கு வரும்.
வியாபாரம் சீரான வளர்ச்சி அடையும். வரவேண்டிய பாக்கிகளை கடுமை காட்டி வசூலிப்பீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
கவலைகள் தீரும். கடன் பிரச்சினையில் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். அது தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் ஒற்றுமை பலப்படும். குடும்ப விஷயங்கள் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

செவ்வாய்-
நிதானமாக செயல்பட வேண்டும். கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம். அலுவலக விஷயங்களை யாரிடமும் பகிரவேண்டாம். அது பிரச்சினையை உண்டுபண்ணும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டக்கூடாது. வியாபாரத்தில் கடன் தர வேண்டாம்.

புதன்-
ஆதாயம் தர்க்கூடிய நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். குடும்பத்தினர் வருத்தங்கள் நீங்கும். நீண்டநாளாக விற்க முடியாமல் இருந்த பொருள் இன்று விற்றுப்போகும்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

வெள்ளி-
புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். வேலையில் இருந்து விலகி சொந்தத் தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

சனி-
இன்று உங்களுக்கு தேவையானது.... பொறுமை, நிதானம், அவசரப்படாமை, உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்காமலும், எந்த வாக்கும் தராமலும் இருக்கவேண்டும்.

ஞாயிறு-
நினைத்தது நிறைவேறும். பணவரவு இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். சுப விஷயங்கள் முடிவாகும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருமணம் தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவை எட்டும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகா சக்தி காளியம்மனை வணங்குங்கள். தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் கிடைக்கும். பிரச்சினைகள் தீரும்.
*******************************************************************

கார்த்திகை -
எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமானலும் முடிவில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் சீராக கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உறவினர்களின் பிரச்சினைக்கு உதவி செய்யவேண்டி வரும். கடன் தொடர்பான விஷயங்கள் நிம்மதி தரும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு சிறப்பான உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செயல்களில் நிதானம் தேவை. பொறுமையாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். கவனமாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். பண வரவு தாமதமாகும். குடும்பத்தினர் தேவையற்ற விஷயங்களை பெரிதுபடுத்தி விமர்சிப்பார்கள். நிதானத்தை இழக்கக்கூடாது.

செவ்வாய்-
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
ஏன் எதற்கு என்றே தெரியாமல் கோபம் ஏற்படும். அலுவலகத்தில் அமைதியாக இருங்கள். வீண் வம்புகள் தேடிவரும். நிதானம் இழக்காமல் இருங்கள். செலவுகள் ஏற்பட்டாலும் கவலைப்படாதீர்கள். ஆரோக்கியத்தில் அச்சம் ஏற்படும். பயம் வேண்டாம்.

வியாழன்-
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். அவர்களின் கல்வி அல்லது திருமணம் பற்றிய விஷயங்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும். செலவுகள் அதிகம் ஏற்படும். அலுவலகத்தில் சிறு விஷயத்திற்கு வாக்குவாதம் ஏற்படும்.


ஞாயிறு-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். பிரச்சினைகள் தீரும்.
*************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்