மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: எதிலும் வேகத்துடன் விவேகமாகவும் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. மனம் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சகபணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
» சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம் ராசியினருக்கு எப்படி?
» சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - ரிஷபம் ராசியினருக்கு எப்படி?
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கவுரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
அஸ்வினி: இந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.
பரணி: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: வெள்ளை மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் மனதில் போட்டு வைத்திருந்த திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்கு பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.
அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிறகலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும். புதிய வாய்ப்புகள் தடைப்படுவதால், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
ரோகினி: இந்த குரு பெயர்ச்சியால் எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
மிதுனம் (மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: நிதானத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும். போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
திருவாதிரை: இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
புனர்பூசம்: இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனைத்து ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024
> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago