மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று ராசியில் இருந்து சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சனியை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு உங்களுடைய கவுரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ, தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம், எச்சரிக்கை.
» புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - தனுசு ராசியினருக்கு எப்படி?
» புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?
உத்தியோகத்தில் மேன்மையுண்டாகும். பணக் கஷ்டம் இருக்காது. முதலாளி - தொழிலாளி உறவு பாதிக்கப்படாமல் காப்பதில் இரு சாராருக்குமே பொறுப்புள்ள – நேரம் இது. உத்தியோக மேன்மையுண்டு. பதவி உயர்வு கிடைக்கும். தேவையான இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.
தொழிலில் அபிவிருத்திகள் படிப்படியாக ஏற்படும். வியாபாரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. மகசூல் அதிகரிக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டாகலாம். பொருளாதாரச் சிக்கல் வராது. தொழில் அபிவிருத்திகள் பாதிக்கப்படாது. மக்கள் சுபிட்சம் சீராக இருக்கும். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பு ஏற்படும். பேசும் வார்த்தையில் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கலைத்துறைப் பணிகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். தொழில் சிறப்படையும். பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படாது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இசை, எழுத்து ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர்.
பெண்களின் பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப அமைதி கெடாது. வேலை செய்யும் பெண்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு பணிகள் சுமாரான நிலையில் நடைபெறும். சில நன்மைகள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதை. உள்ளக்கோளாறு போன்ற குறைகள் நிவர்த்தியாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியம் ஏதேனும் நடக்கலாம்.
மாணவர்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். நலம் விளையும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெறுவர். மருத்துவம், மேனேஜ்மெண்ட் துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு செல்வ நிலையில் எச்சரிக்கையோடு இருந்தால் எதையும் பறிபோகாமல் காத்துக்கொள்ளலாம். மிகுந்த உழைப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. கலைத்துறையில் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படாது. குடும்ப நலம் உண்டு. அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள். நற்பணிகளில் ஈடுபடுங்கள். பேசும்போது அளந்து பேசினால் தொல்லை இல்லை. பெரியோர்களின் ஆசியை விரும்பிப் பெற்றால் பல விஷயங்களில் இழிவு உண்டாகாது தப்பிக்கலாம்.
திருவோணம்: இந்த ஆண்டு பொதுவாகச் சோதனை உண்டு. குடும்ப நலம் பாதிக்கப்படலாம். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உண்டு. பெரியோர்களுக்கு மனவருத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைப்படாது. எந்த விதமான இடரையும் சமாளிப்பதோடு, கவுரவக் குறை உண்டாகாதபடியும் காக்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். விவசாயிகளுக்கு ஏற்றம் ஏற்படும். குடும்ப நலம் சீராக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு அன்றாடப் பணிகள் செவ்வனே நடக்கும். ஆனால் மிகுந்த முயற்சியின் பேரிலேயே ஒவ்வொரு காரியத்தையும் முடிக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்குச் சங்கடம் வராது. விவசாயிகளுக்கு ஏற்றம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் அகலக்கால் வைக்க இது உகந்த நேரம் இல்லை. வீடு, நிலம் போன்றவற்றில் தகராறு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள். பயன் தரும். கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப நலம் சீராக இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023:
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago