புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - கடகம் ராசியினருக்கு எப்படி?

By செய்திப்பிரிவு

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று அஷ்டம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள் நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன்விரோதம் காரணமாக சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்சினை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம்.

அரசியல்வாதிகள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்சினையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு. செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும். கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கவுரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு.

பெண்களுக்கு குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள். மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையில் உள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு இயந்திரப் பணி சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு பிரச்சினைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது. எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது நல்லது.

பூசம்: இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள் நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும். வியாபாரிகள் கவனக் குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும். தெய்வப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மனம் அமைதி அடையும்.

ஆயில்யம்: இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

வீடியோ வடிவில் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்