2022 எப்படி இருக்கும்?   அவிட்டம் நட்சத்திர அன்பர்களே! உதவி செய்வீர்கள்; மதிப்பு கூடும்; மனம் தளராதீர்கள்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அவிட்டம்:


செவ்வாயை நட்சத்திரநாதனாகக் கொண்ட அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கப்பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கித் தருவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம். கலைத்துறையினர் தங்கள் வேலைகளை கவனமாக செய்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பணவரத்து தாமதமாகலாம். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது அவசியம்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு சொத்துகள் சேரும்

பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்