2022 எப்படி இருக்கும்?  பூராடம் நட்சத்திர அன்பர்களே! மனதில் உற்சாகம்; வீண் அலைச்சல்; எதிலும் எச்சரிக்கை! 

By செய்திப்பிரிவு


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


பூராடம்:


சுக்கிரனை நட்சத்திரநாதனாகக் கொண்ட பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண்பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் ஏதாவது சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

கலைத்துறையினர் நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பாடங்களை கவனமாகப் படிப்பது நல்லது.

பொதுவாக உங்களால் இந்த ஆண்டு சாதனைகள் புரிய முடியும்.

பரிகாரம்: துர்கை அம்மனை பாடல் பாடி வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சினைகள் தீரும்.

மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்