- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சென்ற வாரம் பூரட்டாதி எனும் பூர்வ பத்ர பாதா நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.
உத்திரட்டாதி
உத்திரட்டாதி என்பது வானத்தில் மீன ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் காணும் போது முரசு போலவும், கட்டில் கால் போலவும், காமதேனு போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக முரசு, கட்டில் கால், காமதேனு ஆகியவற்றைக் கூறலாம்
இதன் அதிபதி சனி கிரகம் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சனி பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று பார்க்கலாம்.
» மகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! டிசம்பர் 22ம் தேதி வரை
யூனிகான் ரகசியம்
உத்திரட்டாதி என்ற நட்சத்திரம் வானில் மீன ராசி மண்டலத்தில் அமைந்திருக்கிறது. இது வானத்தில் காண்பதற்கு கொம்புள்ள ஒரு குதிரை போன்ற அமைப்பைக் காட்டுகிறது. இதை கிரேக்க மொழியில் யூனிகான் என்று அழைக்கின்றனர்.
உத்திரட்டாதிக்கு நமது இந்து மதம் கூறும் வடிவம் காமதேனு. யூனிகான் குதிரை ஒற்றை கொம்பு தனது நெற்றியில் வைத்துக் கொண்டு ஆகாய வானில் செல்லும் தோற்றம் கொண்டது. நன்றாக கவனித்தால் காமதேனு, யூனிகான் இரண்டிற்கும் ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிகிறது.
யூனிகான் என்பது நெற்றியில் ஒற்றை கொம்பை கொண்டிருக்கிறது. காமதேனு வடிவம் பசுமாட்டை குறிக்கும். ஆனால் முகம் மட்டும் ஒரு பெண்ணின் வடிவம் கொண்டது. அதுபோலவே யூனிகானுக்கு இரண்டு றெக்கைகள் உண்டு காமதேனுவிற்கும் இரண்டு றெக்கைகள் உண்டு.
உத்திரட்டாதி நட்சத்திர வடிவம் இந்த யூனிகான் என்பதால், உத்திரட்டாதி நட்சத்திரத்தை சுப தாரையாக கொண்டவர்கள் அனைவரும் இந்த வடிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூரட்டாதி, விசாகம் மற்றும் புனர்பூச நட்சத்திரக்காரர்கள் இந்த யூனிகான் வடிவத்தை தன்னுடன் வைத்துக்கொள்ள சர்வ சம்பத்துகளும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்.
உத்திரட்டாதி, அனுஷம் மற்றும் பூச நட்சத்திரக்காரர்கள் இந்த யூனிகான் படத்தை தன்னுடன் வைத்துக் கொள்ள அவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். செல்வம் சேரும்.
ரேவதி, கேட்டை மற்றும் ஆயில்ய நட்சத்திர காரர்கள் இந்த யூனிகான் உருவத்தை தன்னிடம் வைத்துக் கொள்ள அவர்களுக்கு சிக்கலிலிருந்து நல்வழிகள் பிறக்கும்.
அவிட்டம், சித்திரை மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் இந்த யூனிகான் வடிவத்தை தினமும் பார்த்து வர அவர்களுக்கு காரிய ஸித்தி உண்டாகும்.
உத்திராடம், கார்த்திகை மற்றும் உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு இந்த யூனிகான் வடிவம் சாதக சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.
உத்திரட்டாதியும் கோமாதாவும்
கோ என்றால் இரு முக்கிய அர்த்தமுண்டு. ஒன்று "பசு". இன்னொன்று "அரசன்". பசுவை அரசனுக்கு நிகராகவும், அன்னைக்கு நிகராகவும் (கோ -மாதா), காமதேனுவாகவும் சித்திரிக்க பல அடிப்படை காரணமுண்டு.
உத்திரட்டாதி நட்சத்திரம் கோமாதாவின் நட்சத்திரம். உத்திராட்டாதி வெற்றி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து இருப்பது வாழ்வில் வெற்றியும், நம்பிக்கையும் தருவதாக அமையும். ஒரு உத்திரட்டாதி ஒரு குழுவில் அல்லது குடும்பத்தில் இருந்தால் போதும் அனைத்து நன்மைகளும், அரிதான வெற்றிகளும் குழு அல்லது குடும்பத்துக்குக் கிடைத்தே தீரும். அந்தக் குடும்பம் தழைத்தோங்கும். அத்தகைய உத்திராட்டாதி பிறவியான பசு மாட்டை ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்து வாழையடி வாழையாக குடும்பம் செழிக்க முன்னோர்கள் வாழ்ந்தனர்.
குடும்பம் தழைக்க பசு உதவும் என்ற இந்த ஜோதிடக் காரணமும் வாழ்வியல் காரணத்தை முன்னிலைப்படுத்தியே "கோமாதா குலமாதா" என்ற சொற்றொடர் எழுந்தது. அத்தகைய பசுவை காப்போம்.
உத்திரட்டாதி கீழ்க்கண்ட நட்சத்திரங்களுக்கு நன்மை பயக்கும். எனவே கீழ்க்கண்ட நட்சத்திர அன்பர்கள் அடிக்கடி பசுவிற்கு தானம் கொடுத்தோ அல்லது வீட்டில் வளர்த்தோ நன்மைகளைப் பெறலாம்.
பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் - செல்வம் தரும் சம்பத்து நட்சத்திரமாக உத்திரட்டாதி
ரேவதி, கேட்டை, ஆயில்யம் - வழிகாட்டும் பரம மித்ர நட்சத்திரமாக உத்திரட்டாதி
அவிட்டம், சித்திரை, மிருகசீரிடம் - நலம் தரும் க்ஷேம நட்சத்திரமாக உத்திரட்டாதி
உத்திராடம், உத்திரம் மற்றும் கார்த்திகை - தோஷம் போக்கும் சாதக நட்சத்திரமாக உத்திரட்டாதி
மற்ற நட்சத்திரங்களுக்கு தனியாக எழுதுகிறேன். அதனால் பதிவு தொடர்பான கேள்விகள் மட்டும் கமெண்ட்டில் கேட்கவும்.
காமதேனு தாரை ரகசியம்
பாற்கடலை குறிக்கும் ராசி மீனம் ஆகும். மீன ராசியில் இருக்கும் உத்திரட்டாதி நட்சத்திர வடிவம் காமதேனு ஆகும். காமதேனு என்பது பாற்கடல் கடையும்போது தோன்றிய பசு வடிவ பெண் ஆகும்.
காமதேனுவின் உருவத்தில் பூசம் நட்சத்திர வடிவங்கள் இணைத்திருப்பதை காணமுடியும். அதன் வால் பகுதியில் கொத்தாக மயில் பீலிகளும், பசுவின் மடியும் இணைத்தே காணப்படும். பூசம் மற்றும் உத்திரட்டாதி இரண்டின் அதிபதி சனியே ஆகும். கேட்டதைக் கொடுக்கும் காமதேனு மஹாலக்ஷ்மியின் வடிவமாகப் போற்றி வணங்கப்படுகிறது.
ஆகவே காமதேனுவை பார்த்து வழிபடும் போது, பூச நட்சத்திர வடிவங்களையும் தரிசித்த பலன்கள் கிடைக்கும். அதுபோல பிரம்மனின் படைப்புத் தொழிலை சிலகாலம் காமதேனு செய்ததால், காமதேனுவை சுப தாரையாக கொண்டவர்கள், காமதேனு உருவத்தை வீட்டின் ஈசான்ய மூலை எனப்படும் வட கிழக்கு மூலையில் வைத்து வழிபட, சந்தான செல்வம் கிட்டும். காமதேனு வடிவத்தை உத்திரட்டாதி , பூசம் மற்றும் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். காமதேனு வடிவத்தை ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தி நல்வழி பெறலாம். காமதேனு வடிவத்தை பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தி செல்வ வளங்கள் பெறலாம். காமதேனு வடிவத்தை அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தி காரிய வெற்றி பெறலாம். காமதேனு வடிவத்தை உத்திராடம், கார்த்திகை, உத்திர நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தி சாதக சூழல்களைப் பெறலாம்.
இதுவரை உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் ரேவதி நட்சத்திரம் பற்றி அறியலாம்.
• வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago