குருப்பெயர்ச்சி பலன்கள் ;    ரேவதி நட்சத்திர அன்பர்களே; வீடு மனை யோகம்; இல்லத்தில் சுபிட்சம்; எதிர்ப்பு மறையும்!

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


ரேவதி:

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

நம்பிக்கையை தோளில் சுமந்து கொண்டிருந்த ரேவதி நட்சத்திர அன்பர்களே!

இந்தக் குருப்பெயர்ச்சியால் ஆனந்தமாகவும், எதிர்காலத்தில் சுபிட்சமாகவும் இருக்க குருபகவானின் பார்வை உங்களுக்கு கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சுப விரயங்களான வீடு, மனை, வாகனம், திருமணம் போன்ற செலவுகள் இருக்கும். எதிர்பார்க்காமல் சில செலவுகள் உண்டாகும் என்றாலும் அவை அனைத்தும் முதலீடுகளே. முக்கிய முடிவுகளை குடும்பத்தில் நீங்களே எடுப்பீர்கள்

தொழிலில் உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். நீங்கள் நிம்மதியாக தொழிலில் முன்னேறலாம். பழைய பாக்கிகள் வருவதற்கு நீங்கள் நிறைய நடக்க வேண்டி வரலாம்.

உத்தியோகஸ்தர்களை உடன் பணிபுரிவோர் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கும். அவற்றை சுப காரியங்களுக்குப் பயன்படுத்துவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

பெண்கள் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களை குறை கூறியவர்கள் விலகிச் செல்வார்கள். உங்களின் மனநிலையைப் புரிந்து கொள்வார்கள்.

மாணவர்களுக்கு பெற்றோர்கள் உங்கள் தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்த்தி செய்வார்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

அரசியல்துறையினருக்கு கட்சி உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை கொடுக்கும். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடம் இருந்துமாறும்.

கலைத்துறையினருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். உங்களின் திறமை வெளிப்படும். திரைத்துறையில் உள்ளவர்கள் உங்களின் திறமையை பயன்படுத்திக் கொள்வார்கள்.

பரிகாரம்:

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு பலம் சேர்க்கும். அர்த்தநாரீஸ்வரரை பிரார்த்தனை செய்து வருவதால் தன சேர்க்கை ஏற்படும்.

மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்